பிரதான செய்திகள்

முஸ்லிம் மக்களின் வாக்குகளின்றி ஒருவராலும் நாட்டின் ஜனாதிபதியாக முடியாது

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் மக்களின் வாக்குகளின்றி ஒருவராலும் நாட்டின் ஜனாதிபதியாக முடியாதென கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.


காத்தான்குடி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜே.ஆர்.ஜயவர்தன முதல் சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரை இந்த நாட்டின் அனைத்து ஜனாதிபதிகளையும் முஸ்லிம் மக்களே அதிகாரத்திற்கு கொண்டு வந்தார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய ஜனாதிபதிக்கு முஸ்லிம் மக்கள் வாக்களித்திருக்கவில்லை என்றால் அவரால் ஜனாதிபதியாக வந்திருக்க முடியாது. 8 இலட்சம் முஸ்லிம் மக்கள் அவருக்கு வாக்களித்தனர்.

முஸ்லிம் வாக்குகளின்றி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற முடியும் என சிலர் கூறுகின்றனர்.

எனினும் முஸ்லிம் மக்களின் வாக்குகளின்றி எந்த ஒரு நபராலும், ஜனாதிபதி ஆசனத்தை பெற முடியாதென அவர் சவால் விடுத்துள்ளார்.

Related posts

கழிவுநீரை நன்னீராக மாற்றும் கருவி: இந்தியா மாணவியின் அசத்தல்

wpengine

பயங்கரவாதிகளுடன் முஸ்லிம் மக்களை ஒப்பிடக் கூடாது அமைச்சர் கபீர்

wpengine

100 மீற்றர் ஒட்டத்தில் தோல்வி அடைந்த உசேன் போல்ட்! ஒய்வு பெறுகின்றார்

wpengine