பிரதான செய்திகள்

முஸ்லிம் பெண்களின் புர்காவுக்கு தடை விரைவில்

இலங்கையில் இஸ்லாமிய பெண்கள் அணியும் புர்ஹா போன்ற ஆடைகளை தடைசெய்யும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.


தேசிய பாதுகாப்புக்கான நாடாளுமன்றத்தின் கண்காணிப்புக்குழு இந்த யோசனையை இன்று முன்வைத்துள்ளது.


ஏற்கனவே இது தொடர்பில் பௌத்த அமைப்புக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு கோரிக்கைகளை முன்வைத்திருந்தன.


தேசிய பாதுகாப்புக்கு இது அவசியமானது என்பதை அந்த அமைப்புக்கள் சுட்டிக்காட்டியிருந்தன.


இதேவேளை அரசியல் கட்சிகள் இனத்தின் அல்லது மதத்தின் அடிப்படையில் பதிவுசெய்யப்படுவதை நிறுத்தும் யோசனையும் இன்று முன்வைக்கப்பட்டுள்ளது.


இந்த இரண்டு யோசனைகளும் விரைவில் அமுலுக்கு வரும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

புதிய மகாநாயக்கர் தெரிவு எதிர் வரும் 7ஆம் திகதி

wpengine

சட்ட விரோத மணல் அகழ்வு மஹியங்கனை – வேரகங்தொட பாலம் அபாய நிலை

wpengine

ஹக்கீம் தன்னை குற்றமற்றவர் என நிரூபித்தாரா?

wpengine