பிரதான செய்திகள்

முஸ்லிம் பிரதி அமைச்சரை நீக்க கோரிய இந்து அமைச்சர் சண்டை

காதர் மஸ்தானின் அமைச்சு விடயதானங்களில் இருந்து இந்து விவகார பிரிவை நீக்குமாறு தாம் அமைச்சரவையிடம் கோரிக்கை விடுப்பதாக இந்து மத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

இந்து மத விவகார பிரதி அமைச்சராக காதர் மஸ்தான் நேற்றைய தினம் பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதன்படி, அமைச்சர் டி.எம். சுவாமிநாதனின் மீள்குடியேற்றத்துறை, புனர்வாழ்வு, வட மாகாண அபிவிருத்தி ஆகிய விடயதானங்களுடன் இந்துமத விவகார விடயதானத்துக்கான பிரதி அமைச்சராகவும் காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், இது அமைச்சரவை விடயதானங்களை பகிரும்போது இடம்பெற்ற சாதாரண விடயம் எனவும் இதற்கு முன்னரும் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இந்துமத விவகார ராஜாங்க அமைச்சராக பதவி வகித்திருந்தார்.

எவ்வாறாயினும் இந்த விடயம் இந்துமத மக்களின் உணர்வுகளை பாதிக்கும் வகையில் அமையும் என்பதால் அவரது பொறுப்பில் இருந்து இந்துமத விவகார விடதானத்தை நீக்கக்கோரி அமைச்சரவைக்கு கடிதம் அனுப்ப உள்ளதாக அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பாலியல் தாக்­கு­தலின் போது பயன்­பாட்­டா­ளரை காப்­பாற்ற உதவும் அணி­யக்­கூ­டிய உப­க­ரணம்

wpengine

ஜனாதிபதி ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கோரிக்கை

wpengine

அமெரிக்கா தூதுவரை திருப்பியழைக்க நடவடிக்கை

wpengine