Breaking
Wed. Nov 27th, 2024
(எம்.எம்.ஜபீர்)

நோன்பு பெருநாள் தினத்தில்  சமாதானம், சமத்துவம் சகோதரத்துவம் பொருந்திய நாளக அமையவேண்டும் என  கல்முனை மாநகரமுன்னாள் முதல்வரும் லங்கா அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைவருமான கலாநிதி சிராஸ் மீராசாஹீப்                    விடுத்துள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

 பெருநாள் தினத்தில் முஸ்லிம்கள் அனைவரும் அதிகாலையில் எழுந்திருந்து, குளித்து புத்தாடையணிந்து, நறுமணம் பூசி, இன்சுவை உணவுகள் உண்டு பின்னர் பள்ளிவாசல்களிலே ஒன்று கூடி தக்பீர் முழக்கம் செய்து இறைவனைப் புகழ்ந்து நன்றி செலுத்தி மகிழ்வர். பள்ளிவாசல்களிலே தமது சகோதார்கள். உறவினர்களுடன் தோளோடு தோள் சேர்த்து நின்று பெருநாள் தொழுகை தொழுது, பின்னர் ஒருவரோடு ஒருவர் கட்டித் தழுவி தமது மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்வர்கள். இந்த புனிதமான நோன்புப் பெருநாளை கொண்டாடும் அனைவருக்கு இனிய வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மன மகிழ்ச்சியடைகின்றேன்.

இன்று எமது நாட்டில் பல்வேறு இன்னல்களுக்கு முஸ்லிம் சமூகம் முகம் கொடுத்துவருகின்றனர். வசதிபடைத்தோர் கவனம் செலுத்தி அவர்களது  பிரச்சினைக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும். அத்துடன் இலங்கை உட்பட உலகில் வாழும் முஸ்லிம்கள் முகம்கொடுத்துள்ள பிரச்சினைகள் நீங்கி அவர்கள் நிம்மதியாகவும்இ சந்தோஷமாகவும் வாழ நாம் அனைவரும் இரு கையேந்தி இறைவனிடம் பிராத்திக்கவேண்டும்.

நோன்பில் நாம் கடைப்பிடித்த அத்தனை நல்லமல்களையும் ஏனைய மாதங்களிலும் கடைப்பிடித்து வாழ இறைவன் உதவி செய்ய வேண்டும்.அனைவருக்கும் இனிய ஈத்துல் பித்ர் நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *