பிரதான செய்திகள்

முஸ்லிம் சமூகத்தை பிரிக்க ரங்கா களத்தில்

(அபு றஷாத்)

 

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரங்கா மகாராஜா நிறுவனத்தால் இயக்கப்படும் சக்தி தொலைக்காட்சியினூடாக மீண்டும் முஸ்லிம் சமூகத்தை பிரிக்கும் கைங்கரியத்தில்   களமிறங்கியுள்ளார்.இதற்கு அவர் யாரிடமிருந்தாவது கொந்தராத்து எடுத்துள்ளாரா என்ற சந்தேகமும் எழுகிறது.இதற்கு முன்பும் அவ்வாறான நடவடிக்கையில் களமிறங்கி முஸ்லிம்களின் பலத்த எதிர்ப்பினால் அவரது சூழ்ச்சிகளுக்குள் முஸ்லிம் அரசியல் வாதிகள் அகப்படவில்லை.

 

தற்போது இலங்கை முஸ்லிம்கள் பலவாறான சாவால்களை எதிர்கொண்டுள்ளனர்.வில்பத்து பிரச்சினையின் போது மு.கா தவிர்ந்து ஏனைய அனைத்து முஸ்லிம் அரசியல் வாதிகளும் ஒன்றிணைந்திருந்தனர்.இது ஒரு முஸ்லிம் கூட்டமைப்பு உருவாக்கக்கூடிய சாதக நிலையை காட்டியது.இச் சாதக நிலையை பயன்படுத்தி முஸ்லிம் அரசியல் வாதிகளை ஒன்று சேர்க்க வேண்டுமென இலங்கை முஸ்லிம்கள் அவா கொண்டுள்ள போதும்  இவரது செயற்பாடுகள் அதனை இல்லாதொழித்து விடுமா என்ற சந்தேகத்தை தோற்றுவிக்கின்றது.

 

முஸ்லிம் அரசியல் வாதிகளுக்குள் காணப்படும் சிறு சிறு முரண்பாடுகளை பூதாகரமாக்கி அவர்களை ஒரு போதும் ஒன்று சேர முடியாதவாறு அவர்களுக்குள் காணப்படும் பிணக்குகளை அதிகரிக்கச் செய்வது இவர் தற்போது கையாளும் உத்தியாக பார்க்க தோன்றுகிறது.முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து பேசாது முஸ்லிம் அரசியல் வாதிகளுக்குள் நிலவும் பிரச்சினை பற்றித் தான் இவரது கேள்விகள் அமைந்திருக்கின்றமை இதனை இன்னும் துல்லியமாக்குகின்றது.

 

இவர் தற்போது அமைச்சர் றிஷாதை இகழ்வதைத் தானே பிரதான தொழிலாக கொண்டுள்ளார்.அது எப்படி முஸ்லிம் கூட்டமைப்பு உருவாதலை நலினப்படுத்தும் எனக் கேட்டலாம்.ரங்கா வை.எல்.எஸ் ஹமீதுடனான விவாதத்தில் அமைச்சர் ஹக்கீமின் குமாரி விடயத்தை அமைச்சர் றிஷாதே உருவாக்கியது போன்று காட்ட முற்படுகிறார்.அவர் காட்ட முற்படும் சந்தர்ப்பத்தில் குறித்த விடயத்தை பேசுவதற்கான எந்த தேவையும் இல்லை.அப்படியா நிலையில் அதனை ஏன் அவர் நினைவு படுத்த வேண்டுமென சிந்தித்தாலே பல விடயங்களுக்கான தெளிவுகளை பெற்றுக்கொள்ளலாம்.

 

வில்பத்து விடயத்தில் அனைவரும் ஒன்றிணைந்த போதும் அமைச்சர் ஹக்கீம் மாத்திரம் ஒன்றிணையாமைக்கு முஸ்லிம் சமூகத்திடமிருந்து  அவருக்கு கடும் அழுத்தம் பிரயோக்கிக்கப்பட்டதாக அறிய முடிகிறது.எதிர்வரும் பிரச்சினைகளில் அவர் அனைவருடனும் இணைந்து செயலாற்றும் மனோ நிலையில் இருப்பதாக அவரது நெருங்கிய வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.இந் நிலையில் அமைச்சர் ஹக்கீமை புகழ்ந்து றிஷாதை இகழும் போது,பழைய பிரச்சனைகளை நினைவூட்டும் போது அரசியல் வாதிகளுக்குள் வைராக்கியம் தோன்றி ஒன்று பட வேண்டும் என்ற மனோ நிலையை பாழாக்கிவிடும்.

 

எனவே,இன்னும் ரங்காவின் கைங்கரியத்திற்குள் எமது முஸ்லிம் அரசியல் வாதிகள் அகப்பட்டு விடக்கூடாது.எமது அரசியல் வாதிகள் சென்றால் தானே அவர் தனது நோக்கத்தை நிறைவு செய்து கொள்ள முடியும்? முஸ்லிம்களை தங்களுக்குள் அடித்துக்கொள்ளச் செய்து பராக்கு காட்டி வேறு ஏதேனும் சாதிக்கும் ரங்காவின் உத்தியாகவும் இது அமையலாம்.இதன் பிறகாவது முஸ்லிம் அரசியல் வாதிகள் சிந்தித்து செயல்படுவார்களா?

Related posts

ஜனாதிபதி ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கோரிக்கை

wpengine

முல்லைத்தீவில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினரை பெற்றுக்கொள்ள கடும் முயற்சி அமைச்சர் றிஷாட்

wpengine

நரேந்திர மோடி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு வாழ்த்து கடிதம்

wpengine