(நிந்தவூர் முபீத்)
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது கொண்ட வயிற்றெரிச்சலை புத்தளத்தில் கொட்டித் தீர்த்திருக்கிறார் அமைச்சர் ஹக்கீம்.
மர்ஹூம் அஷ்ரப்பின் மறைவின் பின்னர் தலைவர் பதவியை தட்டிப்பறித்து அரசியல் செய்து வரும் ஹக்கீம் ரிஷாட்டின் வளர்ச்சியைத் தாங்க முடியாது நொந்து போயிருக்கிறார்.
தனி வேட்பாளராக கட்சிக்குள் வந்து எம் பியாகி, அமைச்சராகி, அரசியல் கட்சியொன்றை உருவாக்கி அதனை வழிநடத்தும் ரிஷாட்டின் எழுச்சியை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
குர்ஆனையும் ஹதீஸையும் பின் பற்றுவதாகக் கூறும் மு காவை வழி நடாத்தும் தலைவர் ஒருவர் பொது மேடைகளிலே மன நோயாளி போல, குடிகாரன் போல, கோமாளியாக, நவீன சார்ளி சப்ளின் போல பிதற்றியிருக்கின்றார்.
சமூகத்தலைவன் ஒருவனுக்கு வாயில் வரக்கூடாத வார்த்தைகளை தாறுமாறாக அள்ளி வீசியிருக்கிறார்.
முஸ்லிம் ஒருவருக்கு அதுவும் முஸ்லிம் கட்சியொன்றின் தலைவனுக்கு இருக்கக் கூடாத இலட்சணங்களுக்கு மாற்றமாக அவர் உரையாற்றியிருக்கிறார்.
“பேயை விரட்டுவதற்கு இப்போது தான் நல்ல ஆசாமி கிடைத்திருக்கின்றது. மயில் கூத்தாட்டத்தை அடக்க சரியான கட்டாடி (வண்ணான்) கிடைத்திருக்கின்றது” என பிதற்றியுள்ள சாணக்கியத் தலைவர், தனது தலைமைக்கு ஆபத்து வந்தால் எதையும் செய்வதற்கு துணிந்துள்ளமையை பகிரங்கமாக போர் முரசு கொட்டி அறிவித்திருக்கின்றார்.
அமைச்சர் ரிஷாட்டை அழித்து விடலாம் என துடித்துக் கொண்டிருக்கும் இந்த ஹக்கீமுக்கு மர்ஹூம் அஷ்ரப்பின் மரணத்திலும் பங்கிருந்ததாக அப்போது சந்தேகமிருந்தது.
முஸ்லிம் காங்கிரஸின் தலைமையை பெற்றுக் கைப்பற்றுவதற்காக அந்த நாசகார வேலையில் அவரும் உடந்தையாக இருந்திருக்கலாமென்று பலர் அன்று கூறினர்.
புலிகளுக்கும் ஹக்கீமுக்கும் இடையே நிறையவே பரிந்துணர்வு இருந்தமைக்கு பல உதாரணங்களைக் கூறமுடியும்.
வன்னிக் காட்டில் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் ஹக்கீமுக்கும் இடையே முஸ்லிம் சமூகம் தொடர்பான உடன்பாடு கைச்சாத்திடப்பட்ட பின்னர் புலிகளினால் முஸ்லிம் காங்கிரஸ் காரர்களுக்கு விருந்து படைக்கப்பட்டது. சாப்பாட்டு மேசையில் கோழிக்கறியைக் கண்ட மர்ஹூம் நூர்தீன் மசூர் “இது ஹலாலா?” என புலிகளின் சமாதான செயலக பணிப்பாளர் புலித்தேவனிடம் கேட்ட போது “தலைவர் பிரபாகரன் ஹலாலைத்தானே தருவார் என்று” முண்டியடித்துக் கொண்டு ஹக்கீம் கூறியதை இங்கு ஞாபகப்படுத்த விரும்புகிறோம்.
பிரபாகரனுக்கு நற்சான்றிதழ் வழங்குவதில் ஹக்கீமுக்கிருந்த ஆர்வம் வெளிப்படுகின்றதல்லவா?
புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனின் மரணத்திற்கு முதன் முதலாக அனுதாப அறிக்கை விட்டவரும் நமது தானைத்தலைவர் தானே?
அமைச்சர் ரிஷாட்டை ஊழல்வாதியென கூறும் ஹக்கீம், நோர்வேயிடமிருந்தும் இந்தியாவிடமிருந்தும் சமூகத்தைக் காட்டி, அந்த நாடுகளைப் பேய்க்காட்டி பெற்ற பணம் எத்தனை கோடி?
ஆட்சி மாற்றத்திலும் ஹக்கீம் பணம் பெற்றாரென்று அமைச்சர்களான ராஜித மற்றும் லக்ஷ்மன் கிரியெல்ல கூறினார்களே? பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க, பணத்தைப் பெற்றுக் கொண்டுதான் ஹக்கீம் நல்லாட்சிக்கு உதவினார் என்று பகிரங்கமாக எழுதினாரே? இவ்வாறு கொள்ளைக் காரனாக இருந்த ஹக்கீம் ரிஷாட்டை ஊழல்வாதியென கூறுவதற்கு வெட்கம் இல்லையா?
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஒரு பெருச்சாளி என்பதை நிரூபிப்பதற்கு இது மட்டுமன்றி எத்தனையோ ஆதாரங்கள் இருக்கின்றன.
தேசியப்பட்டியலில் எம் பியாக இருக்கும் சட்டத்தரணி சல்மானுக்கு அத்தனை ரகசியங்களும் தெரியும்.
அஷ்ரப்பின் உதிரத்தினாலும், வியர்வையினாலும் கட்டப்பட்ட தாருஸ்ஸலாமுக்கு இப்போது என்ன நடந்திருக்கின்றது.
மக்களின் சிந்தனைக்கு இது சமர்ப்பணம்.