பிரதான செய்திகள்

முஸ்லிம் காங்கிரஸ் தலைவராக ஹக்கீம் ஹஸன் அலி உயர்பீடக் கூட்டத்தில் இருந்து வெளியேற்றம்.

(ஏ.எச்.சித்தீக் காரியப்பர்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அவசர உயர்பீடக் கூட்டம் இன்றிரவு (11) நடைபெற்ற போது நாளைய (12) பேராளர் மகாநாட்டில் பரிந்துரை செய்து ஏற்றுக் கொள்வதற்கான புதிய நிர்வாக சபை தெரிவு இடம்பெற்றது.

இதன்போது, கட்சியின் தவிசாளர் பதவிக்கு எம்.ரி. ஹஸன் அலியின் பெயர் உயர்பீட உறுப்பினர்கள் பலரால் முன்வைக்கப்பட்ட நிலையில், அந்தப் பொறுப்பை தான் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என ஹஸன் அலி முற்றாக மறுத்து, நிராகரித்துள்ளார்.

இந்த நிலையில்,அதிகாரமிக்க செயலாளர் பொறுப்பை மீண்டும் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அவர் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. தொடர்ந்தும் மன்சூர் ஏ காதரே அதிகாரபூர்வ செயலாளராக செயற்படுவார் என தீர்மானிக்கப்பட்டது.

இதனையடுத்து, தான் கட்சிக்கு எப்போதும் விசுவாசமாக இருக்கப் போவதாகவும் தனக்கு எவ்வித பதவிகளும் இனித் தேவை இல்லை எனவும் தெரிவித்து இறுதிக் கட்டத்தில் ஹஸன் அலி அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொள்கை பரப்பு பிரதிச் செயலாளராக மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி அலி ஸாஹிர் மௌலானா புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் ரவூப் ஹக்கீமே தொடர்ந்தும் கட்சியின் தலைவராகச் செயற்பட வேண்டுமென உயர்பீட உறுப்பினர்கள் ஏகமனதாக தெரிவித்ததனையடுத்து அல்லாஹு அக்பர் என கூறப்பட்டு அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது.

Related posts

மாவீரர் குடும்பங்களுக்காக 15மில்லியன் ஒதுக்கீடு! செய்த வடமாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன்

wpengine

இத்தாலி நகரமொன்றில் வீடற்றவர்களுக்கு உதவினால் அபராதம்!

wpengine

அன்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இன்று வெளிநாட்டு நிறுவனத்தின் ஒத்துழைப்புடன்…

Maash