கட்டுரைகள்பிரதான செய்திகள்

முஸ்லிம் கட்சியின் காக்கா, குருவிகள் கொக்கரிப்பதை கைவிட வேண்டும்.

கல்முனை தமிழ் செயலக விடயத்தில் முஸ்லிம் கட்சியின் காக்கா, குருவிகள் கொக்கரிப்பதை கைவிட வேண்டும் என்பதுடன் அதை தடுக்க வேண்டும் என சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எம்.நிலாம்டீன் இன்று எழுதியுள்ள பகிரங்க கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அக்கடிதத்தில்,

கல்முனை கோடீஸ்வரனின் அப்பன் வீட்டுச் சொத்தல்ல இப்படியான கல்முனையில் இருந்து உங்களது கட்சியின் உயர் பீட உறுப்பினர் என்று யாரோ ஒரு யஹியா கானாம் ஊடக அறிக்கை விட்டிருக்கின்றார்.

இப்படியான மட்டமான செய்திகளை முஸ்லிம் மக்கள் ரசிக்கவில்லை. விரும்பவில்லை.

சும்மா மூலையில் முகவரி இல்லாமல் உறங்கும் சில்லறை பசங்க இப்படியாக ஊடக கருத்து சொல்லக் கூடாது.

கவீந்திரன் கோடீஸ்வரன் எம்.பி அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் நேரடிப் பிரதிநிதி, ஏக பிரதிநிதி, அவருக்கு எதிராக தரங்கெட்ட வார்த்தைகள் கொண்டு முறை தெரியாமல், தரம் தெரியாமல், முகவரி இல்லாமல் இப்படியாக அறிக்கை விடக்கூடாது.

தேவை இல்லாத அனாவசியமான பொது வெளிக்கருத்தால் தமிழ், முஸ்லிம் இனங்கள் முட்டி மோதும் நிலையை உருவாகக் கூடாது.

முஸ்லிம் காங்கிரஸ் தலைமை இந்த சில்லறைகளின் சிதறல்களை கட்டுப்படுத்த வேண்டும். மட்டுப்படுத்த வேண்டும். கல்முனையில் மக்கள் பிரதிநிதி ஹரீஸ் எம்.பி இருக்கும் போது வால்கள் ஆடக் கூடாது.

வால்களின் கீழ்த்தரமான கருத்துக்களை கண்டிப்போம்!
கல்முனை விடயத்தை கவனமாகக் கையாள வேண்டும். கல்முனை விடயம் கலவர பூமியாக மாறக்கூடாது. சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்ற இடத்திற்கு வந்து விடக்கூடாது.

ஏட்டுக்குப் போட்டியாக சிறுபிள்ளைத் தனமாக பொதுவெளியில் கருத்துக்கள் சொல்லக் கூடாது.

கல்முனை தமிழ் செயலக விடயமானது சில்லறைத்தனமான கருத்துக்களால் சாதிக்கும் விடயம் அல்ல. அதை பக்குவமாக இரண்டு இனத்தின் பிரதிநிதிகள் பேசி சாதிக்கும் விடயமாகும்.

பந்தாவுக்காக பெயருக்காக காக்கா பிடிக்க முந்திரிகொட்டை போன்று பக்குவமில்லாது கடுப்பாகி முட்டி மோதும் கருத்தாக செய்தியாக வரக்கூடாது.

உங்கள் கட்சி பிரதிநிதிகளை தட்டி வையுங்கள். வந்தவன் போனவன் எல்லாம் அறிக்கை விட்டு ஒட்டு மொத்த கல்முனை முஸ்லிம்களையும் அறிவிலிகளாக எடை போட வைக்கும் செய்திகளையும் அறிக்கைகளையும் தடுத்து நிறுத்துங்கள்.

இனிமேல் இப்படியான செய்திகள் அறிக்கைகள் வராமல் இவர்களுக்கு கடிவாளம் போடுங்கள். கல்முனை இன ஒற்றுமைக்கு வித்திடுங்கள். மனித நேயம் வளர்ப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

காத்தான்குடி நகர முதல்வரின் அதிரடி நடவடிக்கை! தினக்குரல் பத்திரிகைக்கு தடை

wpengine

முல்லைத்தீவு பகுதியில் முறுகல் நிலை! மக்கள் போராட்டம்

wpengine

உப்பு கூட்டுதாபன அபிவிருத்திகளை ஆரம்பித்த அமைச்சர் றிஷாட் (படம்)

wpengine