பிரதான செய்திகள்

முஸ்லிம் ஆசிரியை மீது மோதிய மோட்டார் சைக்கிள் (விடியோ)

மடவளை மதீனா மத்திய கல்லூரி முன் மஞ்சள் கோட்டுக் கடவையில் ஆசிரியை ஒருவரை மோட்டார் சைக்கிள் மோதும் வீடியோ காட்சியொன்று வெளியாகியுள்ளது.

 

பாதசாரிகளின் நன்மை கருதி மஞ்சள் கடவைகள் போடப்பட்டுள்ளன. இதில் பாதசாரிகள் எவ்வளவு கவனமாக கடந்து சென்றாலும் வாகனத்தை செலுத்தும் சாரதிகளின் கவனக்குறைவு காரணமாகவும் விபத்துக்கள் ஏற்படுவது உண்டு.

கடந்த 2 ஆம் திகதி மடவளை மதீனா மத்திய கல்லூரி முன் உள்ள மஞ்சள் கோட்டுக் கடவையில் ஒரு ஆசிரியை பல முறை இரு பக்கமும் பார்த்து பாதையைக் கடக்க முயற்சிக்கிறார்.

தன்னுடன் வந்த சக ஆசிரியை கடந்து செல்லும் போது அவர் பின்னே அவரும் கடந்து செள்று பாதித்தூரத்திற்கு மேல் சென்று விட்டார்.

ஆனால் அச்சமயம் ஒரு மோட்டார் சைக்கிள் வந்து அவர் மீது மோதும் காட்சி அருகில் பொருத்த்பட்டிருந்த ஒரு சி.சி.டி.வி ல் பதிவாகியுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த ஆசிரியை கண்டி வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

புத்தளத்தில் உள்ள சிறுநீரக நோயாளி எம்.எச்.எம்.ஹலீல் அவர்களுக்கு உதவுவோம்…!

wpengine

எதிர்வரும் 26ம் திகதி ஜனாதிபதி தலைமையில் சர்வகட்சி கூட்டம்!

Editor

அத்துமீறும் வடமாகாண அரசியல் இனவாதிகள்: சாடுகிறார் விமல்

wpengine