பிரதான செய்திகள்

முஸ்லிம் ஆசிரியைகள் ஆடைகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் நடவடிக்கை

முஸ்லிம் ஆசிரியைகள் மற்றும் கல்விசாரா ஊழியர்களின் ஆடை தொடர்பான சுற்றுநிரூபத்தை வெளியிடுமாறு கல்வி அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் கல்வி அமைச்சரிடம் எழுத்து மூல கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
கல்வி அமைச்சரை இன்றைய தினம் சந்தித்தபோதே இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்,

கடந்த பல வருடங்களாக பாடசாலைகளில் முஸ்லிம் ஆசிரியைகளும் கல்விசாரா ஊழியர்களும் ஹிஜாப் அணிவது தொடர்பாக பல கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டதை தாங்கள் அறிவீர்கள்.

இன்று நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை அடுத்து இந்த ஹிஜாப் தொடர்பான பிரச்சினை மேலும் தீவிரமடைந்துள்ளது கடந்த சில நாட்களாக சில பாடசாலைகளில் ஹிஜாப் அணிந்த ஆசிரியைகளுக்கு இடையூற்று ஏற்படுத்தபட்டுள்ளது.

பொது இடங்களில் முகத்தை மறைக்க தடைசெய்யப்பட்ட புர்காவுக்கும் முகத்தை மறைக்காமல் அணியும் ஹிஜாபுக்கும் இடையில் உள்ள வேறுபாடுகளை பொதுமக்கள் பலர் அறியாமையாலேயே இவ்வாறான குழப்பங்கள் ஏற்படுகின்றன.

எனவே இவ்வாறான முரண்பாடுகளை தவிர்க்க முஸ்லிம் ஆசிரியைகள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் அணியும் ஹிஜாப் தொடர்பாக சுற்றுநிரூபம் ஒன்று கல்வி அமைச்சால் வெளியிடப்பட வேண்டும்.

அண்மையில் சுகாதார அமைச்சாலும் வைத்தியசாலையில் ஹிஜாப் அணிவது தொடர்பான சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

எனவே இது தொடர்பான நடவடிக்கையை விரைவாக முன்னெடுக்கும் படி கேட்டுக்கொள்கிறேன் எ

Related posts

வவுனியாவில் மனித உரிமைகள் நிகழ்வு

wpengine

ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

wpengine

அரசாங்க உத்தியோகத்தர்களின் சேவை குறித்து முறைப்பாடு

wpengine