பிரதான செய்திகள்

முஸ்லிம் அரசியல்வாதிகளை இல்லாதொழித்தே முடிவுக்கு வரும் அனுரகுமார

முஸ்லிம் அரசியல்வாதிகள் தமது அரசியல் அதிகாரத்திற்காக கொண்டு வந்த மத அடிப்படைவாதத்தை தற்போது அவர்களாலும் கட்டுப்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஹக்கீம் மற்றும் பதியூதீன் போன்ற அரசியல்வாதிகள் கொண்டு வந்த இந்த பூதத்தை தற்போது போத்தலில் அடைக்க முடியாமல் இருக்கின்றனர்.

இந்த அடிப்படைவாதம் கத்தோலிக்க மக்களிடம் இருந்து ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் அது முஸ்லிம் அரசியல்வாதிகளை இல்லாதொழித்தே முடிவுக்கு வரும்.
நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை பயன்படுத்தி சிலர் சிங்கள இனவாதத்தை தூண்டி அதன் மூலம் தாம் அதிகாரத்தை கைப்பற்றலாம் என எண்ணி செயற்படுகின்றனர்.

இனவாதத்தின் மூலம் அல்லது அடிப்படைவாதத்தின் மூலம் மற்றுமொரு இனவாதத்தையோ அடிப்படைவாதத்தையோ இல்லாதொழிக்க முடியாது.

முஸ்லிம் சமூகத்திற்கு உருவாகியுள்ள இந்த அடிப்படைவாதத்தை அந்த சமூகமே முளையில் கிள்ளி எறிய வேண்டும். ஆரம்பத்திலேயே அந்த கருவை அழிக்க வேண்டும்.

இல்லாவிட்டால் பெரும் பாதிப்பு ஏற்படும் எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கொழும்பு காலிமுகத்திடலில் பெருநாள் தொழுகை

wpengine

ஜனாதிபதி ஆணைக்குழு முசலிக்கு விஜயம்! பிரதேச செயலகத்தில் கூட்டம்

wpengine

அன்னச் சின்னத்தில் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் வழங்கியுள்ளனர்.

wpengine