பிரதான செய்திகள்

முஸ்லிம் அரசியல்வாதிகள் காணிகளை சட்டவிரோதமாக கைப்பற்றியுள்ளார்கள் -ஞானசார

நாடு முழுவதும் தமது மக்கள் வாழும் பிரதேசங்களை ஏற்படுத்தும் நோக்கில் முஸ்லிம் அரசியல்வாதிகள் 30,000 ஏக்கருக்கும் மேலான காணிகளை சட்டவிரோதமாக கைப்பற்றியுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் வடக்கு, கிழக்கில், முல்லைத்தீவு, மன்னார், ஏறாவூர் பிரதேசங்களில் பாதுகாக்கப்பட்ட வன பகுதிகளுக்கு அருகில் பெருந்தொகையான காணிகளை கைப்பற்றியுள்ளதாக ஞானசார தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதற்கு இணையாக ஏனைய மாகாணங்களிலும் படிப்படியாக இவர்கள் காணிகளை கைப்பற்றி வருகின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

நாட்டின் பல பகுதிகளில் 10 ஏக்கர் முதல் 200 ஏக்கர் வரையான காணிகள் பெறுமதிக்கும் மேலதிகமான பணத்தை செலுத்தி பெற்றுக்கொண்டு எதிர்கால தேவைக்காக ஒதுக்கியுள்ளனர்.

யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இந்த நிலைமை சடுதியாக அதிகரித்துள்ளதுடன், இதனை தடுத்து நிறுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் இந்த குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க போதிய ஆதாரங்களை முன்வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

கந்தர, தெவிநுவர தேவாலயத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழப்பு!

Maash

அம்பாறையில் முஸ்லிம் காங்கிரஸ் மரச் சின்னத்தில் தனித்துக் களம் இறங்க முடிவு .

Maash

2ஆம் கட்ட 5000 கொடுப்பனவு 11ஆம் திகதி பசில் ராஜபஷ்ச

wpengine