Breaking
Sun. Nov 24th, 2024

தாக்குதல் குறித்த முன் ஆயத்தங்கள் மத்திய மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டது என மாகாண ஆளுனர் மைத்திரி குணரட்ன தெரிவித்துள்ளார்.
நாட்டில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களுக்கான முன் ஆயத்தங்கள் மத்திய மாகாணத்திலேயே மேற்கொள்ளப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவத்துடன் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் பங்கேற்காத போதிலும் ஒரு சில கடும்போக்குவாதிகள் தொடர்புபட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய மாகாண ஆளுனர் காரியாலயத்தில் நடைபெற்ற பாதுகாப்பு கூட்டமொன்றில் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பிலான பொறுப்பினை காவல்துறை மா அதிபர் ஏற்றுக்கொள்ளவுமில்லை, அவர் பதவியை ராஜினாமா செய்வதுமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தலதா மாளிகை, கிறிஸ்தவ தேவாலயங்கள் உள்ளிட்ட கண்டியின் அனைத்து மத வழிபாட்டுத் தளங்களுக்கும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மத்திய மலை நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள், நீர் ஊற்றுக்கள் போன்றவற்றுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கடும்போக்குவாதத்திற்கு எந்த வகையிலும் இடம் அளிக்கப்பட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முஸ்லிம்கள் ஹபாயா ஆடைகளை அணிவதனையும் தடை செய்ய வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *