அண்மை காலமாக இலங்கையில் நடைபெற்றுவரும் சர்வதேச தீவிரவாத செயலுக்கும் முஸ்லிம்களுக்கும் எந்தவித சம்மந்தமுமில்லை என்று ஜனாதிபதி சொன்ன பிறகும் முஸ்லிம்கள் மீதும் பள்ளிகள் மீதும் தாக்குதல் நடாத்துவதை வண்மையாக கண்டிக்கின்றோம்.
நேற்று இரவு குருநாகல் மாவட்டத்தின் கின்னியம, பூவெல்ல, யாயவத்த, கரந்தி பொல, குளியாப்பிடிய ஆகிய இடங்களில் உள்ள முஸ்லிம்களின் வியாபார நிலையங்கள், பள்ளிகள், வீடுகள் என பல்வேறு இடங்கள் தாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான கீழ்தரமான செயற்பாடுகள் இலங்கையில் ஒற்றுமையாக வாழும் சமூகங்கள் மத்தியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதுடன் இப்படியான தீவிரவாத தாக்குதல்கள் கண்டிக்கப்பட வேண்டியதாகும்.
எனவே இந்த நாட்டை மீண்டும் பின்னோக்கி நகர்த்த சில அன்னிய சக்திகள் முயற்சி செய்து வருகின்றது இவர்களை இனங்கண்டு சட்டத்தின் முன் நிறுத்த வேண்டியது இந்த நாட்டை நிர்வகிப்பவர்களின் கடமையாகும்.
சட்டம் அனைவருக்கும் ஒன்று என்பதை இந்த நாட்டில் உள்ள ஒரு இனவாத குழு மறந்து விட்டது இவர்களுக்கு யார் ஆதரவு வழங்கினாலும் அவை அனைத்தும் நிச்சயமாக கண்டிக்கப்படவேண்டியதாகும்.