கட்டுரைகள்பிரதான செய்திகள்

முஸ்லிம்கள் சமாதானத்தின் விரோதிகள் அல்லர்

(M.M.M. Noorul Haq)

இலங்கை முஸ்­லிம்­களைப் பொறுத்­த­வரை அவர்கள் எப்­ப­கு­தி­களில் வாழ்­கின்­ற­னரோ அப்­ப­கு­தி­களில் வாழ்­கின்ற ஏனைய சமூக மக்­க­ளோடு எப்­பொ­ழுதும் ஒரு சுமூ­க­மான உற­வையும் பரஸ்­பர நேசத்­தையும் வெளிப்­ப­டுத்தி வாழ்ந்­து­வந்த வர­லாறு தொன்­மை­யா­ன­தாகும்.இத­னால்தான் இந்த நாட்டின் விசு­வா­சத்தில் என்­றுமே பிச­காத ஒரு பிடி­மா­னத்­தையும் கொண்டு வாழ்ந்­து­வ­ரு­கின்­றனர்.

இந்­நி­லைக்கு நேரெ­தி­ராக முஸ்­லிம்கள் சமா­தா­னத்தின் எதி­ரி­க­ளாக அடுத்த சமூ­கத்­தி­லுள்ள சில­ரினால் விமர்­சிக்­கப்­பட்­டி­ருந்­தாலும் அச்­ச­மூ­கத்தின் பெரும்­பா­லான மக்­க­ளினால் முஸ்­லிம்கள் வர­வேற்­புக்­குள்­ளாக்­கப்­பட்டு வந்­தி­ருக்­கின்­றனர்.இதுதான் முஸ்­லிம்கள் இந்த நாட்டின் அமை­திக்கு எதி­ரா­ன­வர்­க­ளாக என்­றுமே இருக்­க­வில்லை என்­ப­தற்கு பல­மாக இருக்­கின்ற ஓர் சான்­றாகும்.
பொது­ப­ல­சேனா போன்ற சிங்­க­ள-­பௌத்த பேரி­ன­வாத ஆதிக்க சக்­திகள் முஸ்­லிம்­களை இந்த நாட்டின் விரோ­தி­க­ளா­கவும் சிங்­கள மக்­களின் விரோ­தி­க­ளா­கவும் காண்­பிக்­கின்ற ஒரு தோற்­றப்­பாட்டை கடந்த மூன்று வரு­டங்­க­ளாக ஹலால் பிரச்­சனை தொட்டு தீவி­ர­வா­தி­கள்-­அ­டிப்­ப­டை­வா­திகள் என்ற கூற்று வரை அவர்­க­ளது முஸ்­லிம்கள் குறித்­தான சித்­த­ரிப்பு விரி­வ­டைந்து காணப்­ப­டு­கின்­றது.

இந்தப் பிழை­யான சித்­த­ரிப்­புக்குள் இந்த நாட்டில் வாழ்­கின்ற பெரும்­பா­லான சிங்­கள மக்கள் இரை­யா­கிப்­போ­க­வில்லை.குறித்த சிலர்தான் இதன் பின்­ன­ணியில் இருந்­து­வந்­தி­ருப்­பதும் நமது அவ­தா­னங்­க­ளுக்­கு­ரி­ய­வை­யாகும்.பொது­ப­ல­சேனா மாத்­தி­ர­மன்றி காலத்­துக்குக் காலம் பௌத்த பேரி­ன­வாத சிந்­த­னை­களில் ஊறித்­தி­ளைத்த சில­ரினால் இம்­முன்­னெ­டுப்­புக்கள் சந்­தர்ப்­பங்­க­ளுக்கு சந்­தர்ப்பம் மேற்­கி­ளப்­பப்­பட்டு வந்­தி­ருக்­கின்­றன.

என்­றாலும் முஸ்­லிம்கள் பௌத்­தர்­க­ளுக்கு எதி­ரான ஒரு சக்­தி­யாக அவர்கள் கரு­து­ம­ளவில் இயங்­கு­த­ளத்தைக் கொண்­ட­வர்­க­ளாக இருக்­க­வில்லை.ஆட்­சி­யா­ளர்­க­ளோடு ஒரு சிநே­க­பூர்­வ­மான உறவை எப்­பொ­ழுதும் பேணு­வதில் முஸ்லிம் சமூகம் பின்­னிற்­காத கோணம்தான் அவர்­க­ளோடு பௌத்த ஆட்­சி­யா­ளர்­களும் ஏனைய சிங்­கள குடி­யியல் சமூ­கத்­தி­னர்­களும் கைகோர்த்து வாழ்­வதில் ஓர் ஆர்­வத்தை வெளிப்­ப­டுத்­தினர். இப் பாங்கு பிரத்­தி­யட்­ச­மா­னது.pikukallllll

அண்­மையில் பொது பல சேனா கொழும்பில் நடத்­திய ஒரு பத்­தி­ரி­கை­யாளர் மாநாட்டில், “இலங்­கையில் முஸ்லிம் அடிப்­ப­டை­வா­தத்தை அழித்து முஸ்­லிம்­க­ளுக்கும் பௌத்­தர்­க­ளுக்­கு­மி­டையில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த திட்­ட­மிட்­டுள்­ள­தா­கவும் இதற்கு முஸ்லிம் அர­சியல் தலை­வர்­க­ளு­டனும் உல­மாக்­க­ளு­டனும் பேச்­சு­வார்த்தை நடாத்த தயா­ராக உள்­ள­தா­கவும்” கலா­நிதி டிலந்த விதா­னகே குறிப்­பிட்­டி­ருந்த செய்­தியை ஊட­கங்­களின் வாயி­லாக நாம் அறி­ய­மு­டிந்­தது.

இந்தக் கூற்றின் மூலம் சிங்­கள மக்­க­ளுக்கும் முஸ்லிம் மக்­க­ளுக்­கு­மி­டையில் பாரிய முரண்­பா­டொன்று வெடித்து தொடர்ச்­சி­யான பிணக்­குகள் இருந்­து­வ­ரு­வ­தா­கவும் அதற்கு தீர்­வு­காண்­ப­தற்­காக பொது பல சேனா தலை­மை­தாங்­கு­வ­தா­கவும் அர்த்­தப்­ப­டுத்­து­கின்­றது.அப்­ப­டி­யானால் இங்கு எழும் கேள்வி யாதெனில் அவர்கள் குறிப்­பிடும் சிங்­கள விரோத செயற்­பாட்­டினை முஸ்லிம் சமூ­கத்­துக்­குள்­ளி­ருந்து முன்­னெ­டுத்த குழு­வினர் யாரென்­ப­தாகும்.

உண்­மையில் இவ்­வா­றான ஒரு நிகழ்வு இங்கு நடை­பெ­றவே இல்லை.அதே­நேரம் அவ்­வாறு நடந்­தி­ருந்­தாலும் கூட அதனைத் தீர்த்­து­வைக்கும் அதி­கா­ரமும் அதற்­கு­ரித்­தான கட்­ட­மைப்பு பொது பல சேனா­வுக்கு யாரால் எப்­போது வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றது என்­கின்ற ஒரு முக்­கி­ய­மான வினாவும் இவ்­வி­டத்தில் எழுப்­பப்­ப­ட­வேண்­டி­யி­ருக்­கின்­றது.

சிங்­கள மக்­க­ளுக்­கெ­தி­ராக முஸ்லிம் மக்கள் அடிப்­ப­டை­வா­தத்தை அல்­லது முஸ்லிம் தீவி­ர­வா­தத்தை பிர­யோ­கிக்­கின்­றனர் என்று ஒரு வாதத்­துக்­காக ஏற்­றுக்­கொண்டால், அது­கு­றித்து பேச்­சு­வார்த்­தையை முன்­னெ­டுப்­ப­தற்கு பொது பல சேனா­வுக்கு எந்­த­வி­த­மான தார்­மீக பொறுப்­புக்­களும் இருக்க முடி­யாது.மாறாக அவர்கள் தம் மக்கள் சார்பில் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான முறைப்­பாட்டை அர­சாங்­கத்­திடம்,அர­சாங்­கத்தின் சட்­ட­திட்­டங்­களை அமுல்­ப­டுத்­து­கின்ற காவல்­து­றை­யினர் போன்­றோ­ரி­டம்தான் புகார் செய்­தி­ருக்க வேண்டும்.இந்த யதார்த்த நிலைக்கு முர­ணாக முஸ்­லிம்­களை பேச்­சு­வார்த்­தைக்கு அழைத்­தி­ருப்­பது ஒரு முரண்­பாட்டு சிந்­த­னையின் வெளிப்­பா­டாகும்.

பொது பல சேனாவின் அழைப்­பைப்­பார்த்த மாத்­தி­ரத்தில் அதன் உள்­ளார்ந்த சதியைப் பற்­றியோ அர்த்­த­மற்ற முனைப்­பென்­பது குறித்தோ முஸ்லிம் சமூ­க­மா­கிய நாம் அக்­கறை எடுத்­துக்­கொள்­ளாது நாம் சமா­தா­னத்தின் தூது­வர்கள் என்­பதை நிரூ­பிப்­ப­தற்­காக முண்­டி­ய­டித்­துக்­கொண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ்,அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் ஆகிய அர­சியல் கட்சி செய­லா­ளர்­களும் அகில இலங்கை ஜம் இய்­யதுல் உலமா சபை,ஐ.தே கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜீ­புர்­ரஹ்மான், அக்­கட்­சியின் அமைச்சர் எம்.எச்.ஏ ஹலீம் போன்­றோர்கள் பச்­சைக்­கொடி காட்­டி­யி­ருப்­பது ஒரு விசித்­தி­ர­மான செய­லென்­றுதான் குறிப்­பிட வேண்டும்.

ஏனெனில் முஸ்லிம் சமூ­கத்­துக்கு பொது பல சேனா போன்­றோர்கள் தவ­றி­ழைத்­தி­ருந்­தா­லும்­கூட நாம் அவர்­க­ளோடு பேசி ஒரு தீர்வைப் பெற­மு­டி­யாது. ஒன்றில் அர­சாங்­கத்­திடம் முறை­யிட வேண்டும் அல்­லது அவர்­களின் செயற்­பாட்டின் இன்­னொரு வடி­வ­மான காவல்­து­றை­யி­ன­ரிடனும் நீதி­மன்­றத்­து­ட­னுமே நாம் நமது பக்க நியா­யங்­களை முன்­வைத்து நியா­யங்கள் பெற­வேண்­டி­யி­ருப்­பதே பொருத்­த­மா­ன­தாகும். இந்த யதார்த்­தத்தை மீறி மேற்­கு­றிப்­பிட்டோர் தமது இசை­வு­களை இயம்­பி­யி­ருப்­பது வியப்­பல்­லாமல் வேறென்­ன­வாகும்?
நமது நாட்டின் மிகப்­பெ­ரிய சட்ட ஏற்­பா­டாக இருப்­பது அர­சி­ய­ல­மைப்புச் சட்­ட­மாகும்.அவ்­வ­ர­சி­ய­ல­மைப்புச் சட்­டத்தின் அத்­தி­யாயம் மூன்று அடிப்­படை உரி­மைகள் பற்றி விப­ரிக்­கின்­றது.அதில் 10ஆவது உறுப்­பு­ரிமை பின்­வ­ரு­மாறு எடுத்­து­ரைக்­கின்­றது.

“ஆளொவ்­வொ­ரு­வரும்,தான் விரும்பும் மதத்தை அல்­லது நம்­பிக்­கையை உடை­ய­வ­ரா­யி­ருத்­தற்­கான அல்­லது மேற்­கொள்­ளு­தற்­கான சுதந்­தி­ர­முட்­பட,சிந்­தனை செய்யும் சுதந்­திரம்,மனச்­சாட்­சியைப் பின்­பற்றும் சுதந்­திரம்,மத சுதந்­திரம் என்­ப­வற்­றுக்கு உரித்­து­டை­ய­வ­ராதல் வேண்டும்.”

மேற்­ப­டி சட்­டத்­திற்கு ஏற்­பு­டை­ய­வர்­க­ளாக முஸ்­லிம்கள் தமது அற­நெ­றி­யான இஸ்­லாத்தை இந்­நாட்டில் பின்­பற்­றி­வ­ரு­கின்­றனர்.அத­னால்தான் இந்த நாட்டின் சிங்­களப் பெரும்­பான்­மையைக் கொண்ட அர­சாங்கம் இருந்தும் கூட முஸ்­லிம்கள் தமது மார்க்க செயற்­பாட்டை முன்­னெ­டுப்­பதில் ஆட்­சே­ப­னை­களை முன்­னி­றுத்­தாது இருப்­ப­தாகும்.ஆயின் முஸ்­லிம்­களின் சமய செயற்­பாட்­டினால் இந்­நாட்டின் அமை­திக்கு சீர்­கு­லைவு ஏற்­ப­ட­வில்லை என்­ப­துதான் இதன் உறு­தி­யான அர்த்­த­மாகும்.

ஆனால் முஸ்லிம் சமூ­கத்தின் மதக் கட­மை­களை முன்­னெ­டுப்­பதில் சில அச்­சு­றுத்­தல்­க­ளையும் பிழை­யான பொருள்­கோ­டல்­க­ளையும் முன்­வைத்து பொது பல சேனா போன்ற அமைப்­புக்­க­ளினால் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்ற அத்­து­மீ­றல்­களை நமது நாட்டு சட்­டத்தின் அடிப்­ப­டையில் கேள்­விக்­குட்­ப­டுத்தும் உரி­மையும் அதன் அவ­சி­யமும் முஸ்லிம் சமூ­கத்­துக்கு பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் ஏற்­பட்­டி­ருந்தும் அதனை சரி­யாக கையாள்­வ­தற்கு முடி­யா­ம­லி­ருக்­கின்­றது.

இந்த தடைக்கு நமது அணு­கு­மு­றையில் ஏற்­ப­டு­கின்ற சறுக்­கு­தல்கள் ஒரு கார­ண­மாக இருந்­தாலும் ஆளும் அர­சாங்­க­மாக இருக்­கின்ற சிங்­கள மக்கள் சார்ந்த கட்சி தலை­மைத்­துவம்,அதன் இருப்பு,தேர்தல் வெற்றி போன்ற கார­ணங்­க­ளி­னாலும் சரி­யான நீதி நிலை­நாட்­டப்­ப­டாமல் மறுக்­கப்­பட்­டு­வ­ரு­கின்ற ஒரு துய­ர­மான நிலை முஸ்­லிம்­க­ளுக்கு இருக்­கின்­றது.இந்­நி­லையின் எதிர்­ம­றை­யா­னது சிங்­கள மக்­க­ளுக்கு இவ்­வா­றான சட்ட ஏற்­பா­டு­களை கையாள்­வதில் எந்தச் சறுக்­கு­தல்­களும் இருப்­ப­தற்கு வழி­யில்லை என்­ப­தைத்தான் திட­மாக தெரி­விப்­ப­தாகக் கொள்­ள­மு­டியும்.

மேற்­சுட்­டிக்­காட்­டிய அடிப்­படை உரி­மைகள் என்­பது மிகவும் வலி­மை­யு­டை­ய­தாக இருக்­க­வேண்­டு­மென்­ப­தனை நமது நாட்டின் சட்ட ஏற்­பா­டுகள் மிகவும் உறு­தி­யாக வலி­யு­றுத்­து­கின்­றது.உண்­மையில் இனப்­பா­கு­பாட்டுச் சிந்­த­னை­யினால் பாதிக்­கப்­ப­டு­கின்ற ஒரு சமூ­க­மாக முஸ்­லிம்கள் இருந்தும் இந்த சட்ட ஏற்­பாட்டின் துணை­யூ­டாக தட்­டிக்­கேட்கும் சந்­தர்ப்­பங்­களை அடைந்­து­கொள்­ளாமல் இருக்­கின்றோம்.இது முன் சுட்­டிக்­காட்­டிய அர­சாங்­கத்தின் சார்பு நிலை­யினால் நாம் முயன்றும் தோற்­றுப்­போய்­வி­டுவோம் என்­கின்ற அச்­சத்தின் வெளிப்­பா­டா­கக்­கூட இருக்க முடியும்.

2007ஆம் ஆண்டின் 56ஆம் இலக்க குடி­யியல் மற்றும் அர­சியல் உரி­மைகள் மீதான சர்­வ­தேச உடன்­பாட்­டொ­ழுங்குச் சட்­டத்தின் 3ஆம் உறுப்­பு­ரி­மையின் முதலாம் உட்­பந்தி  “ஆளெ­வரும் போரைப் பரப்­பு­தலோ அல்­லது பார­பட்­சத்தை,எதிர்ப்பு உணர்ச்­சியை அல்­லது வன்­மு­றையைத் தூண்­டு­வ­தாக அமையும் தேசிய,இன அல்­லது மத ரீதி­யி­லான பகை­மையை ஆத­ரித்­தலோ ஆகாது”.

மேற்­படி சட்டம் என்­பது மதத்தை முன்­வைத்தும் இனத்­துவ குழு­மத்­து­வத்தை முன்­னி­றுத்­தியும் பாகு­பா­டு­களை ஏற்­ப­டுத்­து­வ­தென்­பது ஒரு பயங்­க­ர­வாத செயற்­பாட்­டுக்கு சம­னா­ன­தென்­பதை குறிப்­பி­டு­கின்­றது.அது மாத்­தி­ர­மன்றி இச்­சட்­டத்தின் பின்­னுள்ள உறுப்­பு­ரை­களின் படி இவ்­வா­றான செயற்­பா­டு­களில் ஈடு­ப­டு­ப­வர்கள்,முனைப்புக் காட்­டு­ப­வர்கள் மீது நீதி­மன்­றத்தில் வழக்கு தொடர முடியும் என்­ப­தையும் குற்றம் நிரூ­பிக்­கப்­பட்டால் பத்து ஆண்­டு­க­ளுக்கு மேற்­ப­டாத கடூ­ழிய மறியல் தண்­ட­னைக்கு உட்­ப­டுத்த வேண்டும் என்­ப­தையும் முன்­மொ­ழி­கின்­றது.

இவ்­வா­றான குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு உள்­ளாக்­கப்­பட்ட சந்­தேக நபர்கள் மீது விதி­வி­லக்­கான சூழ்­நி­லை­களில் மேல் நீதி­மன்­றத்­தினால் தவிர பிணையில் விடு­விக்­கப்­ப­டுதல் ஆகாது என்ற கடு­மை­யான சட்ட ஏற்­பா­டுகள் இருக்­கின்­றது.அப்­ப­டி­யாயின் முஸ்லிம் சமூகம் தமது மதத்­தி­னாலோ அல்­லது தமது குழு­மத்­தி­னாலோ பாகு­பாட்டை உரு­வாக்க முனைந்­தி­ருந்தால் இந்தச் சட்­டத்தின் கீழ் தண்­டிக்­கப்­படும் முயற்­சிகள் எப்­போதோ அரங்­கேற்­றப்­பட்­டி­ருக்கும்.அவ்­வா­றான நிலை தோன்­றா­ம­லி­ருப்­பதும் முஸ்­லிம்கள் இவ்­வா­றான செயற்­பாட்டில் ஈடு­ப­ட­வில்லை என்­பதை மிக ஆணித்­த­ர­மாக வலி­யு­றுத்­து­வ­தாகக் கொள்­ள­மு­டியும்.

இலங்­கையின் தண்­டனைச் சட்­டக்­கோ­வையின் பதி­னைந்­தா­வது அத்­தி­யாயம் சமய சம்­பந்­த­மான தவ­றுகள் குறித்து பேசு­கின்­றது.அது­மாத்­தி­ர­மன்றி அடக்­கஸ்­த­லங்­களை அத்­து­மீறி உடைப்­பது,மதஸ்­த­லங்கள் மீது கல்­வீச்சு மேற்­கொள்­வது போன்ற நிகழ்­வுக்­கெல்லாம் இலங்­கையின் சட்­டத்தின் படி தண்­ட­னைக்­கு­ரி­ய­தாகும். சமா­தான சீர்­கு­லை­வுக்­கு­ரி­ய­தா­கவும் அமை­திக்கு பங்கம் விளை­விக்கும் குற்­ற­மு­மா­கவுவே இவை பார்க்­கப்­ப­டு­கின்­றது.

ஆகவே புதி­தாக சட்­டங்­களை ஆக்­கு­வது குறித்து ஆலோ­சிக்­க­வேண்­டிய தேவை இப்­போ­தைக்கு இல்லை.இருக்­கின்ற சட்­டங்­களை சரி­யாகப் பிர­யோ­கிக்­கின்ற சூழ்­நி­லை­யொன்று உரு­வாக்­கப்­பட்­டு­விட்டால் பொது பல சேனா போன்ற இன­வாத,மத­வாத சிந்­த­னை­க­ளினால் ஏற்­ப­டுத்­தப்­ப­டு­கின்ற அசௌ­க­ரி­யங்­களும் இனக்­க­ல­வ­ரங்­களும் இந்த நாட்­டி­லி­ருந்து ஒழிக்­கப்­பட்­டி­ருக்க முடியும்.

ஒன்­று­கூ­டு­கின்ற சந்­தர்ப்பம் தடுக்­கப்­ப­டாத ஒன்­றா­யினும் அது அடுத்த சமூ­கத்­தி­னர்­க­ளுக்கு இடை­யூறை ஏற்­ப­டுத்தும் வகை­யி­லான முனைப்­புக்­களைக் கொண்­ட­தாக அமை­கின்ற போது அது தடுத்து நிறுத்­தப்­ப­ட­வேண்டும் என்­ப­தையும் நமது நாட்டின் சட்­ட­திட்­டங்கள் மிகத் தெளி­வாக சுட்­டிக்­காட்­டு­கின்­றது.இவ்­வேற்­பாட்டின் கீழ் முஸ்­லிம்­களை நிறுத்­த­மு­டி­யா­ம­லி­ருப்­பது கூட முஸ்லிம் சமூகம் இந்த நாட்டில் விரோ­திகள் அல்ல என்­பதை வலி­மைப்­ப­டுத்­து­கின்­றது.

நாம் இங்கு சுட்­டிக்­காட்­டிய சட்ட ஏற்­பா­டு­களைக் கொண்டு நமக்­கெ­தி­ராக முனைப்­புக்­கொள்­ளப்­ப­டு­கின்ற பாகு­பா­டு­களை எதிர்­கொள்­ப­வர்­க­ளாக மாற­வேண்டும்.

அதற்கு முதல்­ப­டி­யாக நாம் செய்­ய­வேண்­டி­யது நாட்டின் அர­சாங்­கத்­திடம் நமது நிலையை விளக்கி நமக்­கெ­தி­ராக முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்ற இடர்­களை நிறுத்­து­வ­தற்கு சட்­டத்தைச் சரி­யான முறையில் உப­யோ­கிக்கும் ஒரு நிலைப்­பேற்றை நிரந்­த­ரப்­ப­டுத்­து­மாறு கோர­வேண்டும்.

உண்­மையில் நாம் பொது பல சேனா போன்ற அமைப்­புக்­க­ளோடு பேசு­வ­தற்கு செல்­வ­தென்­பதும், விளக்­கு­வதும்  நம் மீது கட­மை­யென நினைத்­துக்­கொண்டு,  விளக்கில் வண்டு விழு­வது போல் நாம் சென்று அகப்­பட்­டுக்­கொள்­வதும் நமக்கு ஆரோக்­கி­ய­மான விளை­வு­களைத் தரப்­போ­வ­தில்லை.அர­சாங்கம் நம் மீது இவ்­வா­றான நெருக்­கு­வா­ரங்­களை நேர­டி­யாக பிர­யோ­கிக்­காமல் இருப்­ப­துதான் நமது இன்­றைய பல­மாகும்.அதனை பலப்­ப­டுத்­து­வ­தற்கு என்­னென்ன முயற்­சி­களை நமது தரப்பில் நின்று யார் யாரெல்லாம் முன்­னெ­டுக்­க­வேண்­டுமோ அவர்கள் இப்­பக்கம் தமது சிந்­த­னை­களை செலுத்த வேண்டும்.

சிங்­க­ள-­பௌத்த பேரி­ன­வாத ஆதிக்க சக்­திகள் நம்மை நோக்கி பேசு­வ­தற்­காக அழைத்த பல சந்­தர்ப்­பங்­களில் நாம் பின்­வாங்­காது பகி­ரங்க விவா­தங்கள் வரை சென்று பேசியிருக்கின்றோம்.

கண்ட பலன் தான் என்ன? இதனை அவர்கள் செவிசாய்த்து ஏற்றுக்கொண்டவர்களாக இருந்திருந்தால் மீண்டும் இன்று நம்மை அழைக்கின்றவர்களாக இருக்கமாட்டார்கள்.அப்படியல்லாது இப்போதும் நம்மை அழைக்கின்றார்கள் என்றால் செவிடன் காதில் ஊதிய சங்கு போன்ற பெறுபேற்றைத்தான் நாம் அடைந்திருக்கின்றோம் என்பதையே இது அடையாளப்படுத்துகின்றது.அவ்வாறாயின் இந்த செயற்பாடு நமக்கு விமோஷனத்தை தரவில்லை,தரப்போவதுமில்லை என்பதைத்தான் இடித்துரைக்கின்றது.

தோல்விகண்ட வழிமுறைமைக்குள் மீண்டும் மீண்டுமாக நாம் இழுபட்டுச் செல்வதென்பது நமக்குப் பயனைத்தராத அதேநேரம் அடுத்த சமூகத்தினர்கள் மத்தியில் எரிச்சலூட்டும் நிகழ்வாக மாறிவிடும் அபாயமும் இதிலிருக்கின்றது.இப்படியான பாதையில் நமது பயணத்தை மேற்கொள்வது விவேகமானதல்ல.

ஆயின் இதற்கான மாற்று வழி என்ன என்பதை நாம் தேடியாக வேண்டும்.

இந்த யதார்த்தத்தின் பொறிநிலைக்குள் இருந்துகொண்டு பௌத்த பேரினவாத ஆதிக்க சக்திகளாக செயற்படுகின்ற வலிமையற்ற அமைப்புக்களின் கூப்பாடுகளுக்குப் பின்னால் செல்வதைத் தவிர்த்து நமது நேர்மையில் நம்பிக்கை வைத்தும் நல்லிணக்கத்துக்கு எதிரானவர்கள் நாம் அல்ல என்ற உண்மையிலும் இருந்துகொண்டு நமக்கெதிராக கிளர்ந்தெழுகின்ற இனவாத பாகுபாட்டுச் சிந்தனைகளை சட்டத்தின் துணைகொண்டு எதிர்கொண்டு வெற்றியடைகின்ற ஒரு வழிமுறைமைதான் நமக்கு திட்டவட்டமான வெற்றிகளைக் கிட்டச்செய்யும்.

(நன்றி விடிவெள்ளி)

Related posts

சமூக வலைத்தளம் ஊடான பதிவு பதற்ற நிலைக்கு காரணம்

wpengine

திகனயில் பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் பெருநாள் தொழுகை

wpengine

இளம் யுவதியொருவர் தூக்கிட்டு தற்கொலை

wpengine