Breaking
Mon. Nov 25th, 2024

இலங்கை அரசியல் வரலாற்றில், வடக்கு முஸ்லிம்களுக்கு என முதன்முறையாக ஓரே தடவையில் 2,750 மில்லியன் ரூபாய்கள் ஓதுக்கப்பட்டுள்ளதுடன், 27 வருடகால வரவுசெலவு வாசிப்பின் போது முஸ்லிம்களுக்கு என பெயர் குறிப்பிடப்பட்டு இம்முறை நிதி ஒதுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்க அம்சங்களாக அமைந்துள்ளன.
கடந்த வியாழக்கிழமை, 09 ஆம் திகதி நிதி அமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த 2018 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டத்தில் 1990 ஆம் ஆண்டு வடக்கிலிருந்து பயங்கரவாதப் புலிகளினால் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்ட வடக்கு முஸ்லிம்களுக்காக இந்நிதி ஒதுக்கப்படுவதாக அறிவித்தார்.

நிதி அமைச்சுக்கு நேரடியாக பல தடவைகள் சென்றும், நிதி அமைச்சர் மங்கள சமரவீரவை நேரில் சந்தித்து வலியுறுத்தியும், இவ்வளவு பெரிய நிதியை றிசாத் பதியுதீன் வடமாகாணத்திற்கு என ஒதுக்கிக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பில் அமைச்சர் றிசாத் பதியுதீனை பிரபல செய்தி இணையத்தளங்கள் தொடர்புகொண்டு கேட்டபோது,
வடமாகாண முஸ்லிம்கள் கண்டு கொள்ளப்படாத ஒரு சமூகமாக வடமாகாணசபையினால் நிராகரிக்கப்பட்டு வரும் நிலையில், தாம் மத்திய அரசாங்கத்துடன் போராடி இந்த பெரும் நிதியை வடக்கு முஸ்லிம்களின் நலனுக்காக ஒதுக்க முடிந்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், இந்த 2,750 மில்லியனுடன் மேலதிகமாக 750 மில்லியன் ரூபாய்களை வழங்கவும் நிதியமைச்சர் மங்கள சமரவீர இணங்கியுள்ளதாகவும், இதன்மூலம் வடமாகாண முஸ்லிம்களின் நலனுக்கென மொத்த 3,500 மில்லியன் ரூபாய்கள் கிடைக்கப் பெறுமெனவும் தான் நம்புவதாகவும், முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதி என்றவகையில் நிதி அமைச்சருக்கு நன்றி கூறுவதாகவும் றிஷாட் பதியுதீன் சுட்டிக்காட்டினார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *