Breaking
Sun. Nov 24th, 2024

(ஒட்டமாவடி அஹமட் இர்ஷாட்)

கடந்த காலங்களை முற்றிலும் மறந்து விட்ட நிலையிலும் தான் இந்த நாட்டிலே அதியுயர் பதவியாக இருக்கின்ற நீதிதுறையில் உச்ச நிலை பதவியினை வகித்தவர் என்பதனை மறந்த நிலையில் முற்றுமுழுதான அரசியல் இலாபத்திற்காக வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பிலே இடம் பெற்ற நிகழ்வொன்றில் இந்த நாட்டில் வாழுகின்ற முஸ்லிம்கள் தமிழ் பேசுவதினால் அவர்களும் தமிழர்களே என்று கூறியதும் அல்லாமல் அதற்கும் ஒரு படி மேலே சென்று இஸ்லாம் மதத்தினை முஸ்லிம்கள் முன்னிலைப்படுத்துவது அரசியல் இலாபங்களுக்காகவே என்றும் கூறியிருக்கும் விடயமானது இந்த நாட்டிலே முஸ்லிம்களை எவரும் கேவலப்படுத்திராத வகையில் கேவலப்படுத்தும் செயலாக அமைந்துள்ளது என கிழக்குமாகாண சபை உறுப்பினரான புல்மோட்டை அனவர் விக்னேஸ்வரனுக்கு எதிராக தான் வெளியிட்ட பகிரங்க அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.

மேலும் தனதுகருத்தினை வெளியிட்ட அன்வர்…

1990 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் வாழ்ந்த கொண்டிருந்த அனைத்து முஸ்லிம்களையும் விடுதலைப்புலிகள் துப்பாக்கி முனையில் விரட்டி அடித்தபோது நீதிக்கு அரசரான விக்னேஸ்வரன் உட்பட அனைத்துத் தமிழர்களும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர் என்பது அழிக்க முடியாத வரலாறாகும். அன்று தமிழ் ஈழ போராட்டத்திற்காக ஆயிரக்கணக்கான வட கிழக்கில் வாழ்ந்த முஸ்லிம் வாலிபர்கள் விடுதலை புலிகளின் இயக்கத்தில் சேர்ந்து தமிழ் ஈழத்திற்காக போராடியும் இருதியில் முஸ்லிம்கள் மீது விடுதலை புலிகள் காட்டு மிராண்டித்தனமான முறையில் தங்களுடைய நாடகத்தினை அரங்கேற்றினார்கள். இதனை நீதிக்கு அரசனான தற்பொழுதைய வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் அன்று பார்த்துக்கொண்டே இருந்தார் என்பதனை இன்று அவர் மறந்து விட்டார்.

அது மட்டுமல்லாமல் தங்களுடைய இயக்கத்தில் சேர்ந்து தங்களின் கொள்கைக்காக போராடிய முஸ்லிம் வாலிபர்களையே எந்த வித மனித நேயமும் இல்லாமல் விடுதலை புலிகள் கொன்றொழித்தனை விக்னேஸ்வரன் இன்று மறந்துவிட்டார்கள். அது மட்டுமல்லாமல் தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடுகின்றோம் என்ற நோக்கத்தில் ஆயுத போராட்டத்தில் குதித்திருந்த விடுதலை புலிகள் காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை, ஒன்றும் அறியாத நூற்றுகணக்கான காத்தான்குடி ஹஜ்ஜாஜிகளை கடத்திச் சென்று குருக்கல் மடத்தில் கொலை செய்தமை, நல்லிரவில் உறங்கி கொண்டிருந்த ஏறாவூர் மக்களை துடிதுடிக்க கொல்லை செய்தமை, முஸ்லிம்கள் எதிர்காலத்தில் நிருவாக துறையிலே சாதித்துவிடுவார்கள் என்ற ஒரே காரணத்திற்காக நிருவாக துறையில் கடமையாற்றிய முஸ்லிம்களை தேடித்தேடி கொலை செய்தமை, முஸ்லிம்களினுடைய சொத்துக்கள் காணிகள் என்பன அபகரிக்கப்பட்டமை, மூதூர் முஸ்லிம்களை கொலை செய்து, அச்சுறுத்தி கப்ப்பம் பெற்று அடிமைகளாக்கி தங்களின் கைபொம்மைகளாக வைத்திருந்தமை, திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம்கள் வாழுகின்ற பிரதேசங்களில் எண்ணில் அடங்காத ஆட்கடத்தல்கள், கொலைகள், கப்பம் பெறுதல் போன்ற உலகம் அறிந்த மனித உரிமை மீறல்களை எல்லாம் முஸ்லிம்கள் தமிழ் பேசுவதினால் தமிழர்கள் என்று பேசுகின்ற முதலமைச்சர் விக்னேஸ்வரன் அன்று வேடிக்கை பார்த்துக்கொண்டே இருந்தார் என்பதனை இன்று மறந்து விட்டு பேசுவதானது கேவலமாகவும் மனவேதனை அளிக்க கூடிய விடயமாகவும் இருக்கின்றது.

தற்போது வடக்கும் கிழக்கும் இணைவது பற்றி பரவலாக பேசப்படும் சந்தர்ப்பத்தில், வடக்குடன் ஒட்டு மொத்த கிழக்கும் முஸ்லிம்களுடன் சேர்த்து இணைக்கப்படுமானால், கிழக்கிலுள்ள முஸ்லிம்கள் வடக்குத் தமிழ் தேசியத்திற்கு நிரந்தர அடிமைகளாகிவிடுவார்கள் என்பதனை, இதனை நன்குணர்ந்த விக்னேஸ்வரன் எவ்வாறாவது சர்வதேச சமூகத்திற்கு அதனை மறைத்து முஸ்லிம்களும் தமிழ் பேசுவதினால் தமிழ் இனமே என்பதனை நாசுக்கான முறையிலே சர்வதேசத்திற்கு பரப்பி வருகின்றார். வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம்கள் இன்னுமொரு சிறிபான்மையினர் மத்தியில் வாழ்பவர்கள். அந்தச் சிறுபான்மை சமூகத்தினை சேர்ந்த ஆயுதக்குழுக்களால் சொத்துக்கள் சூறையாடப்பட்டு, பல நூற்றுக்கணக்கான உயிர்கள் தொழுகையிலும் , உறக்கத்திலும், வயல் வெளிகளிலும், பலி கொள்ளப்பட்டு, ஆயிரக்கணக்கில் அகதிகளாக்கப்பட்டு, இன்னும் சொந்த இடங்களில் குடியமர்வதற்கும் இயலாதவர்களாய் வாழ்பவர்கள்தான் முஸ்லிம்கள். ஆகவே முஸ்லிம்களினுடைய பிரச்சினைகள் வேறு. இத்தனை பிரச்சனைகளையும் நீதிக்கு அரசானான முதலமைச்சர் விக்னேஸ்வரன் நேரடியாக கண்டும், படித்தும், அறிந்துள்ளவராக இருந்தும் இவ்வாறு மீண்டும் முஸ்லிம்களினுடைய உள்ளங்கள் வேதனைபடும் அளவிற்கு முஸ்லிம்களும் தமிழ் இனம்தான் என்று பேசி இருப்பதானது எதிர்காலத்தில் ஒரு பொழுதும் இவர்கள் முஸ்லிம்களினுடைய அடிப்படை உரிமைகளை விட்டுக்கொடுக்க மாட்டார்கள் என்பதனை வெளிச்சம் போட்டு காட்டும் விடயமாக இருக்கின்றது.

முக்கியமாக நான் இங்கு ஒரு விடயத்தினை விக்னேஸ்வரனுக்கு கூறிக்கொள விரும்புக்கின்றேன் அதாவது இலங்கையில் இன நல்லுறவு முக்கியமானது.


அதற்காக இனத்தின் பெயரையோ அல்லது அவர்களினுடைய மதச்சின்னத்தினையோ விட்டுக் கொடுக்க முடியாது என்பதனை நீதிக்கு அரசானக இருந்த விக்னேஸ்வரன் நன்றாக புறிந்து கொள்ள வேண்டும். இலங்கை முஸ்லிம்கள் தனிக்கலாச்சாரம், தனித்துவம், மொழி, வரலாறு ,மத அனுஸ்டாங்கள், என்று ஒரு தேசிய இனத்திற்குறிய அணைத்து அடிப்படை அம்சங்களையும் கொண்டிருக்கின்ற ஒரு தேசிய இனமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இந்த நிலையிலே முஸ்லிம்கள் இந்த நாட்டில் தமிழ் மொழியினை பேசுகின்றார்கள் என்பதற்காக அவர்கள் தமிழ் இனத்தினை சார்ந்தவர்கள் என்றும் முஸ்லிம் என்ற மதத்தினை அவர்கள் முன்னிலைப்படுத்துவது அரசியல் நோக்கங்களுக்காகவே என முதலமைச்சர் வின்னேஸ்வர கூறியுள்ளமையானது இந்த நாட்டில் வழுகின்ற முஸ்லிம்களின் மனதினை மிகவும் புன்படுத்தியுள்ளதோடு, முஸ்லிம்களினுடைய அரசியல் அபிலாசைகளையும், அடிப்படை உரிமைகளையும் எதிர்காலத்தில் ஜனநாயக வழியில் பெற்றுக்கொள்வதற்கு தமிழ் சமூகம் இடமளிக்குமா என கேள்வியாய் தொடுத்து நிற்கின்றது. ஆகவே எதிர்காலத்தில் விக்னேஸ்வரன இவ்வாறான அறிக்கைகளை விடுகின்ற பொழுது இன்னொரு சமூகத்தின் மனங்கள் பாதிக்காத வகையில் நிதானமாக நடந்து கொள்ள வேண்டும் என கூறினார் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *