எமது பிரதேசத்தில் தற்போது முஸ்லிம் அரசியல்வாதிகளின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இதற்கு பதிலடி கொடுப்பதற்காக களத்தில் இறங்கியுள்ளோம் என கருணா தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக் குழுவில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை தேர்தல் திணைக்களத்தில் செலுத்திய பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தெரிவிக்கையில்,
கூட்டமைப்பால் ஏமாற்றப்பட்ட மக்களுக்காகவும், முஸ்லிம் அரசியல்வாதிகளால் ஏற்படும் தொந்தரவுக்கு உள்ளாக்கப்படுகின்ற மக்களின் விடிவுக்காகவே உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றோம்.
தமிழ் மக்களின் எதிர்கால நன்மைகளை கருத்தில் கொண்டு சிறந்த அரசில் தலைமைத்துவத்தை தமிழர்களுக்கு வழங்க வேண்டும்.
இதற்காக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி ஆரம்பித்து ஒரு வருடம் பூர்த்தி அடைந்துள்ளது. இதனை ஒரு தனித்துவமான அரசியல் கட்சியாக வளர்க்கவேண்டும் என்பது தான் நோக்கம்.
கூட்டமைப்பிலிருந்து பலர் வெளியேறுவது, பின் மீண்டும் சேருவது போன்ற அரசியல் வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டிருக்கன்றது.
அதேபோன்று கூட்டமைப்பில் இருந்து வெளியேறி பலர் புதிய கூட்டமைப்புகளை உருவாக்கியுள்ளனர்.
மேலும், எமது பிரதேசத்தில் தற்போது முஸ்லிம் அரசியல்வாதிகளின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இதற்கு பதிலடி கொடுப்பதற்காக களத்தில் இறங்கியுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.