பிரதான செய்திகள்

முஸ்லிம்களின் 45 சடலங்கள் இதுவரை அடக்கம்- சவேந்திர சில்வா

இந் நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் வைக்கப்பட்டிருந்த 45 கொவிட் பூதவுடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்

அதன்படி, கொவிட் சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பில் காணப்பட்ட பிரச்சினைகள் முழுவதுமாக நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இன்னும் ஓரிரண்டு சடலங்கள் உள்ளதாகவும் அவை விரைவில் அடக்கம் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில், ஓட்டமாவடி பிரதேசத்தில் அடக்கம் செய்யும் பணிகள் இடம்பெற்று வருவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் தெரிவித்தார்.

Related posts

அர்ஜுன ரணதுங்கவை பதவி விலகுமாறு கோறி எழுத்து மூல அறிவிப்பு!

Editor

பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனத்திடம் கல்வி அமைச்சு விடுத்த விசேட கோரிக்கை!

Editor

நாட்டிலிருந்து கடந்த காலங்களில் வெளியேறிய விசேட வைத்திய நிபுணர்கள், மீண்டும் நாட்டுக்கு வர வேண்டும்.

Maash