பிரதான செய்திகள்

முஸ்லிம்களின் வாழ்க்கையில் சுபீட்சமும் சௌபாக்கியமும் உருவாக வேண்டுமென பிரார்த்திக்கின்றேன்.

நபி அவர்களுக்கு முஸ்லிம்கள் வழங்கத்தக்க புனித கௌரவம், அவர் போதித்த கருணையையும் நேர்மையையும் மேலும் சமூகமயப்படுத்துவதே:

அனைவரதும் நம்பிக்கைக்குரியவராக மாற வேண்டுமெனில், கருணை மற்றும் நேர்மை என்பன அவசியம் என்பதை உலகுக்கு சுட்டிக்காட்டிய முஹம்மத் நபி அவர்களின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகின்றது.

எந்தவொரு சமூகத்திலும் வாழ்கின்ற மனித குலத்தின் சிந்தனை மற்றும் நடத்தை என்பவற்றின் அடிப்படையாக அமைவது – அவர்கள் நம்பிக்கை கொண்டு ஏற்றுக்கொள்கின்ற ஆழமான மார்க்கமே ஆகும்.

இறைவன் நேர்மையுள்ள மனிதர்களுக்கு கருணை காட்டுவதோடு, அவ்வாறான மனிதர்களுக்குத் தகுதியான உயர் அந்தஸ்த்தையும் வழங்குகின்றான் என்பதை –

முஹம்மத் நபி அவர்களின் வாழ்க்கை மற்றும் முன்மாதிரியான நடத்தை என்பவற்றை ஆழமாகக் கற்கும்போது விளங்கிக்கொள்ள முடிகிறது.

இலங்கை உட்பட உலகவாழ் அனைத்து முஸ்லிம்களினதும் கௌரவத்துக்குரிய முஹம்மத் நபி அவர்களின் வழிகாட்டல்களை –

மேலும் சமூகமயப்படுத்தி ஒற்றுமையை உருவாக்குவதே, நபி அவர்களுக்கு முஸ்லிம்கள் கொடுக்கக்கூடிய விசேட கௌரவமாகும் என்று நான் நினைக்கின்றேன்.

அவர்களின் வாழ்வு முழுவதும் மனித நலனைக் கருத்திற்கொண்டு கடைபிடித்து வந்த குணாம்சங்களை, ஏனைய காலங்களை விடவும் தற்போதைய சூழ்நிலையிலேயே சமூக நலனை மேம்படுத்துவதற்காகப் பயன்படுத்துவது பொருத்தமானதாக அமையும்.

இன்றும், உலக மக்களின் மரியாதைக்குரிய நபி அவர்களின் வாழ்க்கை வழிகாட்டல்களை கௌரவத்துடன் பின்பற்றி வருகின்ற –

இலங்கை முஸ்லிம்கள் உட்பட, உலகவாழ் முஸ்லிம்களின் வாழ்க்கையில் சுபீட்சமும் சௌபாக்கியமும் உருவாக வேண்டுமென பிரார்த்திக்கின்றேன்.

Related posts

13வயது சிறுமியின் பாலியல் துஷ்பிரயோகம்! பெற்றோர்களின் பண ஆசை

wpengine

வவுனியா – இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் சாதனை: 34 மாணவிகள் 9 A சித்தி..!

Maash

பனாமா ஆவணம் தொடர்பில் அனுரகுமாார,முஸம்மில் இருவரும் கருத்தை மீளபெற வேண்டும்

wpengine