பிரதான செய்திகள்

முஸ்லிம்களின் மனதை புண்படுத்திய விக்னேஸ்வரன்! மன்னிப்பு கேட்ட வேண்டும்.

‘இஸ்லாத்தினைத் தமது அரசியல் தேவைகளுக்காக முஸ்லிம்கள் பயன்படுத்துகின்றனர் என்று தெரிவித்த சி.வி.விக்னேஸ்வரன், அதற்காக முஸ்லிம்களிடம் பகிரங்கமாகவே மன்னிப்புக் கேட்கவேண்டும்’ என்று, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்தார்.

பொரளையில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில், நேற்றுமுன் தினம் புதன்கிழமை (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டில், பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள் எவ்வாறு தங்களது மதத்தினைப் பின்பற்றுகின்றார்களோ, அதேபோலவே, முஸ்லிம்களும் மதத்தினைப் பின்பற்றுகின்றார்கள். வடமாகாண முதலமைச்சரின் கருத்தானது, இலங்கை வாழ் அனைத்து முஸ்லிங்களின் மனங்களையும் புண்படுத்துகின்ற செயற்பாடாகும் இதற்காக அவர், பகிரங்கமாக மன்னிப்பு கோரவேண்டும்’ எனத் தெரிவித்தார்.

Related posts

கொஸ்கம சாலாவ சம்பவம் மஹிந்த, கோத்தா பொறுப்பு சொல்ல வேண்டும் -அகில

wpengine

முசலி மக்களின் கோரிக்கை! வில்பத்து புதிய வர்த்தமானி அறிவித்தலை இரத்துச்செய்யுங்கள்

wpengine

பௌத்த பிக்குகள் கண்டி பள்ளிவாசலுக்கு முன்னால் ஆர்பாட்டம்

wpengine