முஸ்லிம்களின் பூர்வீக தாயகப்பிரதேசத்தை கபளீகரம் செய்யும் திட்டத்தை ஒருபோதும் அங்கீகரிக்கமாட்டேன். அவசியப்படுமிடத்து அமைச்சுப் பதவியை துறப்பேன் என அமைச்சர் றிசாத் பதியுதீன் இணையத்திடம் கூறினார்.
முஸ்லிம்களின் பூர்வீக தாயகப்பிரதேசத்தை கபளீகரம் செய்யும் திட்டத்தை ஒருபோதும் அங்கீகரிக்கமாட்டேன். அவசியப்படுமிடத்து அமைச்சுப் பதவியை துறப்பேன் என அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஜனாதிபதி மைத்திரி மற்றும் பிரதமர் ஆகியோரிடம் எனது நிலைபாட்டை தெளிவாக விளக்கிவிட்டேன். எந்த விட்டுக்கொடுப்புக்கும் நான் தயாரில்லை. நாங்கள் வாழ்ந்த தாயக பூமியை சுவீகரிப்பதற்கு யார் ஜனாதிபதிக்கு அதிகாரம் கொடுத்தது. முஸ்லிம்களிடமிருந்து வர்த்தமானி அறிவித்தல் மூலம் சுவீகரிக்கப்பட்ட பிரதேசங்களை விடுவித்தாக வேண்டும்.
ஜனாதிபதியின் செயலாளரின் சந்திப்பின் பின்னர் எமக்கு சிறிதளவு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அவர் தவறு நடைபெற்றுள்ளதை ஏற்றுக்கொண்டுள்ளார்.
பலம்பொருந்திய மஹிந்த ராஜபக்ஸவை முஸ்லிம்களின் துணையுடன் அசைத்துகாட்டிய நாம், இந்த நல்லாட்சி அரசாங்கம் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டால் அல்லது அவர்களின் காணிகளை கபளீகரம் செய்தால் அரசாங்கத்திலிருந்து வெளியேறவும் தயங்கமாட்டோம். அவசியப்பட்டால் இந்த அரசாங்கத்தை இறைவின் துணையுடளும், மக்களின் ஆதரவுடனும் மாற்றிக்காட்டவும் பின்நிற்கமாட்டோம் என்பதை தெளிவாக கூறிவைக்க விரும்புகிறேன்.
முஸ்லிம் சமூகம் அரசாங்கத்தை மாற்றிக்காட்டும் வல்லமையுடையது என்பதை மஹிந்த ராஜபக்ஸவுக்கும் ஏனைய தரப்புகளுக்கும் நிரூபித்துள்ளோம்.
ஜனாதிபதி அவர் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை ரத்துச்செய்ய வேண்டும். அல்லது அதில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும். இது நடைபெற்ற வேண்டும். ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களை நான் ஒருபோதும் கைவிடமாட்டேன். அவர்களின் நிலமீட்பு போராட்டத்திற்காக மரணம் வரை போராடுவேன் என திட்டவட்டமாக கூறுவதுடன், மக்களின் போராட்டம் வெல்ல அத்தனை உயர்மட்ட பங்களிப்புகளையும் வழங்குவேன் என உறுதியளிக்கிறேன் எனவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் திட்டவட்டமாக தெரிவித்தார்.