பிரதான செய்திகள்

முஸ்லிம்களின் பிரச்சினை! 9நாட்டு தூதுவர்களிடம் முறைப்பாடு

இலங்கையில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் இன்னல்கள் மற்றும் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் குறித்து 9 நாட்டு தூதுவர்களிடம் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது.

 

கொழும்பு தெவட்டஹவா பள்ளிவாசலில் இன்று மாலை அசாத் சாலியினால் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வொன்றுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உள்ளிட்ட தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா, கனடா ஆகிய 9 நாட்டு பிரதிநிதிகளிடமே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கலந்துரையாடல்கள் மற்றும் வீடியோ காணொளிகள் மூலம் முஸ்லிம்கள் இலங்கையில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு எடுத்துச்சொல்லப்பட்டதுடன் இது வரைகாலமும் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பான முறைப்பாட்டு அறிக்கையும் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் தாம் இது குறித்து இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதாக தெரிவித்தனர்.

இக் கலந்துரையாடலில் முஸ்லிம் பிரதிநிதிகள், முஸ்லிம் அமைப்புக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சென்னை விமான நிலையத்தில் இலங்கையர்கள் இருவர் மாரடைப்பால் உயிரிழப்பு!

Editor

முன்னால் அமைச்சரின் நீதி ஒதுக்கீட்டில் பாடசாலை நுழைவாயில்

wpengine

ஓட்டமாவடி சிராஜிய்யா அரபுக் கல்லூரியினை பார்வையீட்ட ஷிப்லி பாறுக்

wpengine