பிரதான செய்திகள்

முஸ்லிம்களின் உடலங்களை அடக்கம் செய்ய அனுமதிக்கவேண்டும்.

இஸ்லாமிய முறைப்படி கொரோனவினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடலங்களை அடக்கம் செய்ய அனுமதிக்கவேண்டும் என்று மலேசியாவின் முஸ்லிம் அமைப்பு ஒன்று இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.


மலேசியாவின் இஸ்லாமிய அமைப்புக்களின் ஆலோசனைக்குழு இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளது.
இலங்கையில் தற்போது சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் மதப் பாகுபாடு, இலஙகை நாட்டின் பன்மைத்துவ மற்றும் இணக்கமான சகவாழ்வுக்கு ஏற்புடையதாக இல்லை என்று மலேசிய அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.


மலேசியாவின் நியூ ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸில் பிரசுரிக்கப்பட்டுள்ள கடிதம் ஒன்றில் மலேசிய முஸ்லிம் அமைப்புக்களின் ஆலோசனை சபை தலைவர் மொஹ்ட் அஸ்மி அப்துல் ஹமீட், மத தப்பெண்ணம் மனதில் குடிகொண்டிருக்கும் நிலையில் உலக சுகாதாரப் பிரச்சனையை தீர்க்கமுடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.


சுகாதார பிரச்சனையின்போது சிலர் மதப்பிரிவுகளை தெரிவு செய்கிறார்கள் என்பது வருத்தம் தருகிறது
இலங்கையில், முஸ்லிம்களை அடக்கம் செய்வதற்கான வழிமுறைக்கு பதிலாக முஸ்லிம்கள் அரசாங்கத்தால் தகனம் செய்யப்படுகிறார்கள் என்ற செய்தி கவலை அளிக்கிறது.


உடல்களை தகனம் செய்வது இஸ்லாமிய விழுமியங்களுக்கு எதிரானது. முஸ்லிம்களின் மத உரிமைகளை மதிக்காமல் உடலங்களை தகனம் செய்வதற்கான முடிவு மிகவும் மூர்க்கத்தனமானது, என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


முஸ்லிம்கள் இதனை மத சுதந்திரத்திற்கு எதிரானதாக மட்டுமல்லாமல், சர்வதேச மனித உரிமைகள் மீறலாகவும் கருதுகின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.


அனைத்து இலங்கை ஜாமியதுல் உலமா அமைப்பு மற்றும் பிற இலங்கை அரசியல் கட்சிகள் வெளிப்படுத்திய கோரிக்கைகள் இலங்கை அரசாங்கத்தினால் புறக்கணிக்கப்பட்டுள்ளன.


இதேவேளை இறந்த உடல்களில் இருந்து மற்றவர்களுக்கு வைரஸ் பரவுகிறது என்பதை அனுமானத்தின்படி இல்லாமல் அறிவியல் அடிப்படையிலான உண்மைகளை இலங்கை அதிகாரிகள் கருத்தில் கொள்ள வேண்டும்.


இதை சர்வதேச அளவில் புகழ்பெற்ற மருத்துவ நிபுணர்கள் மற்றும் உயிரியல் விஞ்ஞானிகள் மறுத்துள்ளனர் என்றும் மலேசிய முஸ்லிம் அமைப்புக்களின் ஆலோசனை சபை தலைவர் மொஹ்ட் அஸ்மி அப்துல் ஹமீட் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

இலங்கையில் மின்சார பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த அமைச்சரவை அங்கீகாரம்!

Editor

முல்லைதீவில் சட்டவிரோத மாடு கடத்தல்! மஸ்தான் முன்னிலையில் சி.சிவமோகன் குற்றசாட்டு

wpengine

மீறாவோடையில் இடம்பெற்ற முப்பெரும் விழா

wpengine