(வாஸ் கூஞ்ஞ)
சர்வதேச சபை பொறிமுறை ஊடாகவே நீதி கிடைக்கும் என்பதால்தான் இன்று மன்னார் முள்ளிக்குளம் தமிழ் மக்களினதும் மறிச்சுக்கட்டியில் முஸ்லீம் மக்களினதும் இந்த நிலவிடுவிப்பு போராட்டம் எமக்கு சுட்டிக்காட்டி நிற்கின்றது என வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஐிலிங்கம் இவ்வாறு தெரிவித்தார்.
மன்னார் முள்ளிக்குளம், மறிச்சுக்கட்டி பகுதியில் தமிழ் முஸ்லீம் மக்கள் தங்கள் பூர்வீக காணி விடுப்பிக்காக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இடங்களுக்கு கடந்த சனிக்கிழமை (03) இலண்டனிலிருந்து சர்வதேச மன்னிப்பு சபை குழுவினர் இவ் மக்களை சந்தித்த போது வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஐிலிங்கமும் அங்கு பிரசன்னமாகி இருந்தார்
அப்பொழுது வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஐிலிங்கம் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்
போர் முடிவுக்கு வந்த பின்பு 2015ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு இராணுவ மயமாக்கல் நீக்கப்படும் உட்பட பல்வேறு நிகழ்வுகள் நடந்தேறும் என பலரும் எதிர்பார்த்தார்கள்.
அரசியல் கைதிகள் விடுதலை, பயங்கரச் சட்டம் மீளப்பெறுதல், ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் விடுவிப்பு, இராணுவ மயமாக்கல் குறைப்பு, காணாமல் போனவர்களின் விடயத்தில் தீர்வு போன்ற எந்த விடயத்திலும் முன்னேற்றம் அடையாத சூழ்நிலையில் கண் துடைப்பாக சில விடயங்கள் மாத்திரம் செய்துவிட்டு செய்தவற்றின் விளைவுதான் முள்ளிக்குளம் போன்ற நிலவிடுவிப்பு போராட்டத்தில் தமிழ் முஸ்லீம் மக்கள் பங்குபற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆகவே ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை விடுவித்து அரசாங்கம் குறைந்தது 1990 ம் ஆண்டு நிலமைக்கு உடனடியாக நிலமையை மாற்றி அமைக்க வேண்டும். அவ்வாறு 1983ம் ஆண்டு நிலமைக்கு படையினரை விலக்கிக் கொள்வதன் மூலம்தான் ஒரு சுமூக நிலமையை இவ் நாட்டில் ஏற்படுத்த முடியும்
.
அதேபோன்று ஆக்கிரமிக்கப்பட்ட காணி விடுதலை கட்டாயமாக காணாமல் போனவர்களுக்கு ஏற்பட்ட நிலமையை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும்.
காணாமல் போனவர்கள் இருக்கின்றார்களா அல்லது இல்லையா அல்லது அவர்களுக்கு என்ன நடந்தது என்பதையும் இவ்வாறு அரசியல் கைதிகளின் விடுதலை பயங்கரவாதச் தடைச் சட்டம் போன்ற எல்லாவற்றையும் குறிப்பாக சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கின்றது.
30க்கு கீழ் ஒன்று என்ற தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் ஒரு சில கண் துடைப்பினதைத் தவிர நிறைவேற்றவில்லை. இதனால் மீண்டும் சர்வதேச சமூகம் 34க்கு கீழ் ஒன்று என்ற அடிப்படையிலே இரண்டு ஆண்டுகளை வழங்கியுள்ளது.
இவர்கள் சர்வதேச விசாரனையாளர்களை ஏற்றுக் கொள்ளப் போவதில்லையென கூறியிருக்கின்றார்கள்.
ஆகவே சர்வதேச சபை பொறிமுறை ஊடாகவே நீதி கிடைக்கும் என்பதால்தான் இந்த போராட்டம் எமக்கு சுட்டிக்காட்டி நிற்கின்றது என வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஐிலிங்கம் இவ்வாறு தெரிவித்தார்.