பிரதான செய்திகள்

முல்லைத்தீவு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு தமிழ் மக்கள் எதிர்ப்பு! பூர்வீக முஸ்லிம்கள் கவலை

முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பு பகுதியில் ஒரு தொகுதி முஸ்லீம் மக்களை குடியேற்றம் செய்வதற்கான முதல்கட்ட வேலைகளே இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து குடியேற்றதிற்கான மேற்பார்வைக்கு வருகைதந்த அதிகாரிகளுடன் அப்பகுதியை சேர்ந்த தமிழ் மக்கள் குடியேற்றதிற்கு எதிராக வாய்த்தர்க்கதில் ஈடுபட்டிருந்தனர்.

இன்றைய தினம் கொழும்பிலிருந்து வருகைதந்த ஜானாதிபதியால் அமைக்கபட்ட ”மக்களின் தேவைகளுக்காக காணிகளை விடுவிக்கும் செயலணியால்” அதற்கான முதல்கட்ட நடவடிக்கையாக குடியேற்றம் செய்யவிருக்கும் பகுதி, மேற்பார்வை செய்யப்பட்டிருந்தது.

 

இந்த நிலையில் செயணியின் வருகையை அறிந்த சில பொது மக்கள் குறித்த இடத்திற்கு வருகை தந்து அதிகாரிகளுடன் வாக்குவாததில் ஈடுபட்டதோடு இப்பகுதியில் பூர்வீகமாக மக்கள் வாழ்ந்திருந்தால் குடியேற்றம் செய்வதில் ஆட்சேபனை இல்லை எனவும் புதிய குடியேற்றங்களை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்பதையும் குறிப்பிட்டிருந்தனர். வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் அதிகாரிகளின் பாதுகாப்புக்காக பொலிஸ் வரவழைக்கப்பட்டதும் குறிப்பிடதக்கது.

இந்தநிலையில் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்த மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், இன்று வருகைதந்துள்ள குறித்த குழுவானது முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்களின் குடியேற்றம் ஏனைய தேவைகள் தொடர்பில் காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியால் அமைக்கபட்ட குறித்த குழுவே இன்று வருகைதந்துள்ளது.

 

எமது முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்களின் பயன்பாட்டுக்கு தேவையான காணிகள் தொடர்பில் எம்மால் அறிவிக்கபட்ட காணிகளை ஆராயும் பொருட்டும், ஏற்கனவே தமிழ் மக்களால் காடுகளை அழித்து அமைக்கப்பட்டுள்ள காணிகளை மேற்பார்வைசெய்து அனுமதி வழங்குவது தொடர்பில் ஆராயும் பொருட்டும் வருகைதந்துள்ளதோடு மற்றும் இந்த கூளாமுறிப்பு காணி தொடர்பில் ஏற்கனவே தவறான கருத்து பரிமாற்றங்கள் இடம்பெற்றுவரும் நிலையில் அது தொடர்பில் ஆராய்ந்து தீர்மானங்களை மேற்கொள்ளும் பொருட்டே இந்த குழுவினர் வருகைதந்துள்ளதாகவும் இந்த காணிகளில் குடியேற்றம் மற்றும் ஏனைய  விடயங்கள் தொடர்பில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவே தீர்மானங்களை மேற்கொள்ளும் என்றும் அதுவரையில் இது தொடர்பில் மேலதிகமாக எதுவும் தன்னால் தெரிவிக்கமுடியாது எனவும் தெரிவித்தார்.

Related posts

கண்டி,அம்பாறை மீதான தாக்குதல் ஐ.நா.வில் ஆவண திறைப்படம்

wpengine

அதிபரை இடமாற்றக் கோரி ஆர்ப்பாட்டம், சுழற்சி முறை சத்தியாக்கிரகம்

wpengine

கவிக்கோவின் இழப்பு தமிழ் கூறும் உலகுக்கு பாரிய இடைவெளி அமைச்சர் ரிஷாட் அனுதாபம்

wpengine