பிரதான செய்திகள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவநாதர் ஆரம்ப பாடசாலை முதலிடம்

நேற்றுமுன் தினம் வெளியான புலமைப்பரிசில் பரீட்சையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவநாதர் ஆரம்ப பாடசாலை முதலிடம் பெற்றுள்ளது.

இதனடிப்படையில்   மாணவர்கள் மூவர் 182 புள்ளிகளைப் பெற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலாமிடத்தையும் 181 புள்ளியை பெற்று 04 ஆம் இடத்தையும் பெற்றுக்கொண்டதோடு 34 பேர் சித்தியடைந்துள்ளனர்.
செல்வன் மு.அபிசங்கர், செல்வன் மு.தேனகன், செல்வன் ச. புகழ்வேந்தன் ஆகியோர் 182 புள்ளிகளைப்பெற்று முதலிடத்திலும் செல்வி த.எழிலரசி 181 புள்ளிகளை பெற்று மாவட்டத்தில் நான்காமிடத்திலும் உள்ளனர். தொடர்ச்சியாக ஜந்து வருடங்களாக இப்பாடசாலை மாவட்ட ரீதியில் முதலிடத்தில் காணப்படுவதோடு இம்முறை  80 பேர் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் 34 பேர் சித்தியடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது

Related posts

வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள விசேட தேவையுள்ள மீனவர்கள், விவசாயிகளுக்கு செயற்கை அவயவங்கள்.

Maash

திருமணம் முடித்துக்கொடுக்கும் அனுபவம் கொடுமையானது பைசல்

wpengine

கல்முனையில் இனவாதம் இயலாமையால் வென்றதா..??

wpengine