பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முல்லைத்தீவு ஆசிரியர் ஒருவர் பாடசாலை மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு

முல்லைத்தீவில் பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியரைத் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவர் பாடசாலை மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில் கடந்த 24.12.2021 அன்று முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலை சிறுமிகள் மீது ஆசிரியர் பாலியல் தூஸ்பிரயோக முயற்சி தொடர்பில் சிறுவர் பெண்கள் பாதுகாப்பு பிரிவிற்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினை தொடர்ந்து முல்லைத்தீவு பொலிஸாரால் குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட ஆசிரியர் விசாரணைகளின் பின் 25.12.21 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது வரை இன்று வரை 04.01.2022 விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணை இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீபதி ரி.சரவணராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது எதிர்வரும் 18.01.2022 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்ற உத்தரவிட்டுள்ளது.

Related posts

33வருட கால புலிகளின் போராட்டத்தை தோற்கடித்த மஹிந்த

wpengine

குறைந்த வருமானம் பெறுவோருக்கு இலவச சூரியக்கலங்களை வழங்க திட்டம்.

wpengine

இன்று பிரதமர் ஹரிணி யாழ் விஜயம் .!

Maash