பிரதான செய்திகள்

முல்லைத்தீவு அகழ்வு ஆராய்ச்சி இடங்களை பார்வையீட்ட பௌத்த துறவிகள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் அகழ்வு ஆராய்ச்சி பணிகள் முன்னெடுக்கப்படும் குருந்தூர் மலைக்கு பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் உள்ளிட்ட பௌத்த மதகுருமார்கள் படை அதிகாரிகளுடன் நேற்று (30) மாலை சென்று பார்வையிட்டுள்ளனர்.

குறித்த மலைப் அடிவாரப் பகுதியில் பொலிசார் படையினர் கடமைகளில் நின்றபோதும் எந்த வித தடையும் இன்றி தேரர்கள் மலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை அங்கு செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களுக்கான அனுமதி பொலிசாரால் மறுக்கப்பட்டுள்ளதுடன் ஊடகவியலாளர்கள் பதிவிற்கும் உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.

குருந்தூர் மலையினை பார்வையிட்டு வந்த தேரர்களை படம் எடுக்க வேண்டாம் என்று அங்கு கடமையில் நின்ற பொலிசாரால் ஊடகவியலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் குருந்தூர் மலைக்கு அருகில் உள்ள குருந்தூர் குளத்தினையும் பார்வையிட்டுள்ளார்கள்.

Related posts

அரச பணிகளை ஆரம்பிப்பதற்கான விசேட திட்டம்

wpengine

மனித உரிமைகளின் வரலாறு

wpengine

மட்டக்களப்பு மாவட்ட செயலகம் தீக்கிரையாக்கப்படும் அம்பிட்டிய சுமணரத்ன தேரர்

wpengine