இலங்கை தேசிய சதுரங்க விளையாட்டு அமைப்பினால் (Chess Federation of Sri Lanka ) முல்லைத்தீவு மாவட்டத்தில் முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கை தேசிய புதியவர்கள் பிரிவினருக்கான சதுரங்க விளையாட்டுப் போட்டி!
இலங்கை புதியவர்கள் பிரிவினருக்கான சதுரங்க விளையாட்டுப் போட்டி (Sri Lanka National Novices Division Chess Championships) முதன் முதலாக நேற்றும் இன்றும் இலங்கை தேசிய சதுரங்க விளையாட்டு அமைப்பினது முல்லைத்தீவு மாவட்ட சதுரங்க விளையாட்டு ஒருங்கிணைப்புக் குழுவினுடைய ஏற்பாட்டில் முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.இப்போட்டியில் சுமார் 100 மாணவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இச் சதுரங்க சதுரங்க விளையாட்டுப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
இப் போட்டியானது முல்லைத்தீவு மாவட்டம் சார்ந்த அனைத்துப் பாடசாலைகளிலும் கல்வி பயிலுகின்ற மாணவர்களுக்கு கிடைக்கப்பெறுகின்ற ஓர் அரிய வாய்ப்பாகக் காணப்படுவதுடன் முல்லைத்தீவு மாவட்டத்தின் மாணவர்கள் சதுரங்க விளையாட்டுத்துறை சார்ந்து வளர்ச்சியடைவதற்கு ஏதுவாக அமைந்துள்ளது.
மாவட்ட ஊடகப்பிரிவு
மாவட்ட செயலகம்
முல்லைத்தீவு


