பிரதான செய்திகள்

முல்லைத்தீவில் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா

இன்று முல்லைத்தீவு கச்சேரி கேட்போர் கூடத்தில் வனஜீவராசிகளால் பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி கேதீஷ்வரன் தலைமையில் வலுவாதார, வனஜீவராசிகள் அமைச்சர் பீல்ட் மார்ஷல் கெளரவ சரத்பொன்சேகா புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சர் கெளரவ காதர் மஸ்தான் ஆகியோரின் பங்கேற்புடன் இடம்பெற்றது.

வனஜீவராசிகளால் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய பல்வேறு பிரச்சனைகள் குறித்து இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டன.

வனஜீவராசிகள் திணைக்களப் பணிப்பாளர் திரு.சூரியபண்டார,திணைக்களத் தலைவர்கள் மற்றும் அரச உயர் அதிகாரிகள் எனப் பலரும் இக் கூட்டத்தில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ISIS தீவிரவாதிகளை உருக்கியவர் ஓபாமா – டொனால்ட் ட்ரம்பின் (விடியோ)

wpengine

2023ஆம் ஆண்டு உயர்தர பரீட்சையில் புதிய பாடம்! அமைச்சர் ஜி. எல். பீரிஸ்

wpengine

செல்பி எடுத்த ஜனாதிபதி கோத்தா

wpengine