பிரதான செய்திகள்

முருங்கன் பிரதேச வைத்தியசாலையில் இராணுவ வீரர்கள் இரத்த தானம் வழங்கி வைப்பு

 இராணுவத்தின் 542வது படைப்பிரிவின் ஏற்பாட்டில், மன்னார் – முருங்கன் பிரதேச வைத்தியசாலையில் இரத்த தானம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த இரத்த தான நிகழ்வு மன்னார் வைத்தியசாலையின் கோரிக்கைக்கு அமைவாக, படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரியின் தலைமையில் நேற்று காலை நடைபெற்றது.

இதில், இராணுவத்தின் 542வது படைப்பிரிவின் கீழ் உள்ள மாந்தை மற்றும் உயிலங்குளம் இராணுவ முகாமைச் சேர்ந்த 151 இராணுவ வீரர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்துள்ளனர்.

இந்த இரத்த தான நிகழ்வில் முருங்கன் பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர் மற்றும் இராணுவத்தின் 542வது படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

புத்தளம் நகர சபை ஆளும் தேசிய மக்கள் சக்தி வசம்.

Maash

அஸ் ஸெய்யத் அலவி மௌலானா காலமானார்.

wpengine

வடமேல் மாகாணத்திற்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம்

wpengine