கிண்ணியா பிரதேச சபை ஆயிலியடி வட்டார முன்னாள் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர் சகோதரர் M.L. ஷியாப்தீன் (JP) அவர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் கௌரவ பாரளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் ரிஷாட் பதியுதீன் முன்னிலையில் உத்தியோகபூர்வமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டார்.
எதிர்காலத்தில் திருகோணமலை மாவட்டத்தின் கட்சியின் வளர்சிக்கு முழு மூச்சாக தானும் தனது ஆதரவாளர்களும் செயற்படுவதாக தலைவரிடம் உறுதியளித்தார்.
இந்நிகழ்வில் அரசியல் அதிகார உயர்பீட உறுப்பினர்களான சட்டத்தரணி Dr. ஹில்மி மஹ்றூப், Dr. ஹில்மி முஹைதீன் (MOH), திருகோணமலை மாவட்ட செயற்குழு செயலாளருமான விவசாய போதனாசிரியர் E.L. அனீஸ், ஆயிலியடி வட்டார வேட்பாளர் சகோதரி ரிஸ்வானா முகம்மது கியாஸ் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.