(முகம்மது இத்ரிஸ் இயாஸ்தீன்,மருதமுனை)
கடந்த தினங்களில் சமூகவலை தளங்களில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் துல்சான் முஸ்லிம் காங்கிரஸ் தலைமையை விமர்சிப்பதும் அவர் மீது குற்றம் சாட்டுவதும் சம்பந்தமான ஒரு வீடியோ பரவிவந்ததை அனைவரும் அவதானித்தோம். இதில் வேடிக்கையான விடயம் என்னெவெனில் தனது சொந்த ஊரில் எந்தவிதமான மக்கள் ஆதரவும் இல்லாத ஒருவர் அழைத்த மறு நொடியே முக்கியமான மீடியாக்கள் அங்கே சென்று குவிந்தமையும் அவர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மீது சொல்லும் குற்றச்சாட்டுக்களின் உண்மைத் தண்மையை அறியாது அதை பிரசுரித்தமையும் ஆகும்.
துல்சான் என அழைக்கப்படும் துல்ஹர் நயீம் கடந்த மாகானசபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமையிடம் தஞ்சம் அடைந்து தன்னை வேட்பாளராக நிறுத்தும்படி மன்றாடியதை தொடர்ந்து அவர் மீது இரக்கம் கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் தலைமை அந்த தேர்தலில் அவரை போட்டியிட வைத்தது. தன்னால் வெற்றி பெற முடியாது என்று தெரிந்தும் முஸ்லிம் காங்கிரஸ் பக்கம் வந்து தன்னை மாகாணசபை உறுப்பினராக்கிய அதாஉல்லாவினை வாய்க்கு வந்தது போல் பேசிய துல்சான் இன்று தான் பிரபல்யம் அடைய வேண்டும் என்ற நோக்கில் இந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.
ஆக ஆரம்பத்தில் அதாஉல்லாவினால் அரசியலுக்கு அறிமுகமான துல்சான் பிற்காலத்தில் அதாஉல்லாவினை விமர்சித்தார். இதனைத்தொடர்ந்து கைகொடுத்த முஸ்லிம் காங்கிரஸின் தலைமையை விமர்சித்து தற்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் ஒட்டிக்கொண்டுள்ளார். இவர் இதன் தலைமை அமைச்சர் ரிசாட் பதியுதினை விமர்சிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை. ஒருவிடயம் சம்பந்தமாக பேசுபவர் அந்த விடயத்தில் யோக்கியனாக இருக்க வேண்டும் அப்போதே இந்த சமூகம் அவரை நம்பும் ஆனால் இந்த விடயத்தில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் துல்ஸானின் யோக்கியத்தன்மை எவ்வளவு என்பது மருதமுனைக்கு தெரியும். எனவே இனிமேலும் கௌரவ முன்னாள் மாகாணசபை உறுப்பினர் துல்ஸான் ஆதரமில்லாத குற்றச்சாட்டுக்களை முன்வைக்க வேண்டாம் அவ்வாறு முன்வைத்தால் தயவு செய்து ஆதாரம் காட்டுங்கள். மேலும் சில விடயங்களை கூறுவதில் இருந்து ஒதுங்கிக் கொண்டவனாக.