பிரதான செய்திகள்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்கா கொழும்பில் கைது!

வவுனியா செட்டிக்குளம் பகுதியில் 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் திகதி வாகன விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் உ யிரிழந்த சம்பவம் தொடர்பில் வவுனியா மேல் நீதிமன்றில் வழக்கு இடம்பெற்றுவரும் நிலையில், குறித்த வழக்குடன் தொடர்புடைய சாட்சியாளர்களை அச்சுறுத்தியதற்காக இன்று அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

சாட்சியாளர்களுக்கு தொலைபேசி அழைப்பு எடுத்து அதன் பின்னர் அவர்களை வாகனமொன்றில் ஏற்றிக் கொண்டு வேறிடத்துக்கு அழைத்துச்சென்று ஶ்ரீரங்கா அச்சுறுத்தியுள்ளதாக பொலிசார் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். இதனையடுத்து அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மன்னார்/ வவுனியா மாவட்ட நீதிபதி முஹம்மத் நிஹால் உத்தரவிட்டிருந்தார்

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ரங்கா சற்று முன்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சற்றுமுன்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், திங்கட்கிழமை அவர் வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

நாளை வவுனியாவில் ரணில்,மைத்திரி! விஷேட ஏற்பாடுகள்

wpengine

வவுனியாவில் மருமகனின் கத்தி குத்துக்கு இலக்காகிய மாமியர்! இருவர் வைத்தியசாலையில்

wpengine

எதிர்வரும் ஜூன் மாதம் நலன்புரி கொடுப்பனவுகளை வழங்க திட்டம்!

Editor