பிரதான செய்திகள்

முன்னாள் சபாநாயகர் பாக்கீர் மாகாரின் 100 ஆவது பிறந்ததினம்

(எம்.எஸ்.எம். ஸாகிர்)

முன்னாள் சபாநாயகரும் ஆளுநருமான தேசமான்ய எம்.ஏ.பாக்கீர் மாகாரின் நூறாவது பிறந்த தினம் நாளைமறுதினம்(12) வெள்ளிக்கிழமை இடம்பெறுகின்றது.

1917 மே மாதம் 12 ஆம் திகதி பிறந்த பாக்கீர் மாகார், 1997 செப்டம்பர் 10 ஆம் திகதி காலமானார்.

இவரது பிறந்த தினத்தை முன்னிட்டு இலங்கை ஒலிப்பரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் சக்தி தொலைக்காட்சியில் நினைவுதின உரைகள் இடம்பெறுகின்றன.

12 ஆம் திகதி இரவு 8.05 மணிக்கு மீள்குடியேற்ற அமைச்சர் எம்.எஸ்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவும், பிற்பகல் 1.00 மணிக்கு பொது நிர்வாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார சிங்களத்திலும் இரவு 7 மணிக்கு ஆங்கிலத்தில் சட்டத்தரணி ஜாவித் யூ]{ப்பும் இரவு 7.30 மணிக்கு இலங்கை பத்திரிகைப் பேரவை உறுப்பினர் எஸ்.தில்லைநாதனும் உரையாற்றவுள்ளனர்.

11 ஆம் திகதி இரவு 10.30 மணிக்கு சக்தி தொலைக்காட்சியில் பாக்கீர் மாகார் பற்றியும் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறும். பொதுச்சேவை ஆணைக்குழு அங்கத்தவர் பேராசிரியர் ஏ.ஜி. `{ஸைன் இஸ்மாயில் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் ஆகியோர் பங்குப்பற்றுவர். நிகழ்ச்சியை றியாஸ் ஹாரிஸ் தயாரிக்கின்றார்.

இதேநேரம் நூறாண்டினை முன்னிட்டு அகில இலங்கை முஸ்லிம் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள ஸ்தாபகர் தின நிகழ்வு எதிர்வரும் 15 ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு கொழும்பு 10, டி.ஆர்.விஜயரத்ன மாவத்தையில் அமைந்துள்ள தபால் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெறும்.

இதில் உயர்கல்வி நெடுஞ்சாலை அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்லவும், ஜே.வி.பி.பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்கவும் பிரதம அதிதியாகவும், கௌரவ அதிதியாகவும் கலந்துகொள்வர்.

Related posts

இறக்குமதி செய்யப்பட்ட யூரியா உரம் இன்று முதல் விநியோகம்!

Editor

பல்கலைக்கழகங்கள் மீள திறக்கப்படும் திகதி அறிவிப்பு!

Editor

அரச அலுவலகங்களுக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும்-எரிசக்தி அமைச்சு

wpengine