பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியுதீன் முயற்சியினால் சிலாவத்துறை வைத்தியசாலைக்கு உபகரணங்கள்

சிலாவத்துறை பிரதேச வைத்தியசாலைக்கு 1.6 மில்லியன்  செலவில் மருத்துவ ஆய்வுகூடம்  நிர்மாணிக்கப்பட்டுள்ளது.


நீண்ட காலமாக முசலி சிலாவத்துறை வாழ் மக்கள் மருத்துவர்களினால் பரிந்துரைக்கப்படும் மருத்துவ பரிசோதனைகளை செய்வதற்கு முறையான போக்குவரத்து வசதிகள் இல்லாத சந்தர்ப்பத்திலும் 30 கி.மீட்டர் தூரத்திற்கு பயணம் செய்தும் , பல நாட்கள் மன்னார் பொது வைத்திய சாலையிலேயே தங்கியிருந்து, அப்பரிசோதனைகளுக்கான அறிக்கைகளை பெறவேண்டிய பரிதாப நிலையிலேயே காணப்பட்டுவந்தது. இவ்விடரை இம்மருத்துவ ஆய்வுகூடம் நிவர்த்தி செய்யும் என்று மக்கள் நம்புகின்றனர்.


மேலும் இம்மருத்துவ ஆய்வுகூட வசதி உலக வங்கியின் நிதி உதவியின் வழங்கப்பட்டிருந்த போதிலும் கடந்த ஓரிரு வருடங்களாக  ஒப்பந்தக்காரர்களின்மையினால் இழுபறி நிலையில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர்  இவ்வேலைத்திட்டத்தினை மாவட்ட வைத்திய அதிகாரி தலைமையிலான  வைத்திசாலை அபிவிருத்திக் குழு  ஏற்று பணிகளை சிறப்புற செய்து முடித்தனர்.

மேலும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், மாவட்ட அதிகாரி தலைமையிலான அணியினர், பொறியியல் பிரிவினர், திட்டமிடல் மற்றும் முகாமைத்துவ பிரிவினர், வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் மற்றும் கிராமிய அபிவிருத்தி சங்கத்தின் அயராத முயற்சிகளினால் இவ்வாய்வு கூடத்தின் பணிகள் துரிதமாக்கப்பட்டதன் விளைவாக இன்று மக்கள் பாவனைக்கு வழங்கப்பட்டுள்ளது.


மேலும் இவ் ஆய்வு கூடத்திற்கான உபகரணங்கள் யாவும் முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களின் முயற்சியால் 2017/2018 காலப்பகுதியில்  வழங்கி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் இவ்வாய்வு கூடத்திற்கான மருத்துவ ஆய்வு  தொழில்நுட்பவியலாளர்  (MLT) ஒருவரை நியமிக்கும்படி மக்கள் சுகாதார அமைச்சரிடமும்  கோரிக்கை வைக்கின்றனர். இக்கோரிக்கையினை சுகாதார அமைச்சர் கரிசனையில் எடுத்து இவ்வாய்வுகூடத்திற்கான மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர்  (MLT)  ஒருவரை நியமிக்க வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது.

Related posts

அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு எதிரான சிங்கள ஊடக பிரச்சாரம்

wpengine

‘கீழாடையுடன் மட்டுமே 90 நாள் வைத்திருந்தனர்’ – சேனக்க டி சில்வா

wpengine

”முஸ்லிம்களின் முதுகில் அடிமைச்சாசனம் எழுத“ ரவூப் ஹக்கீமை வளைத்துப் போடுவதற்கான காய்நகர்த்தல்கள்

wpengine