பிரதான செய்திகள்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு அறிவிப்பாணை

எதிர்வரும் 17ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு அறிவிப்பாணை விடுத்து உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றம் முன்னாள் அமைச்சர் சேனாரத்னவுக்கு பிணை வழங்கியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஆராய்ந்த போதே மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

ராஜித சேனாரத்ன பிணையில் விடுதலை செய்யப்பட்டமைக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

சர்ச்சைக்குரிய வெள்ளை வான் செய்தியாளர் சந்திப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட ராஜித சேனாரத்ன தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதனையடுத்து டிசம்பர் 30ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கியது.

கடந்த நவம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் நடத்திய சர்ச்சைக்குரிய வெள்ளை வான் செய்தியாளர் சந்திப்பு தொடர்பாக ராஜித சேனாரத்னவை கைது செய்யுமாறு சட்டமா அதிபர், குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு உத்தரவிட்டிருந்தார்.

ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்கள் நடைபெற்ற நேரத்தில் வெள்ளை வான் சாரதிகள் எனக் கூறப்படும் இரண்டு பேரை அழைத்து வந்து இந்த செய்தியாளர் சந்திப்பை நடந்தியிருந்தார்.

Related posts

ராஜபக்ஷவிற்காக தியாகம் செய்ய இருக்கின்றோம் என்று சொன்னவர்கள் தலைமறைவு

wpengine

கிராம மட்டத்தில் புத்தாண்டு தடை

wpengine

ஆறுமுகம் தொண்டமானின் மருமகன் ஊழல் மோசடியில் கைது

wpengine