பிரதான செய்திகள்

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவினால், தற்போது நாடாளுமன்றத்தில் எதனையும் செய்ய முடியாது.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவினால், தற்போது நாடாளுமன்றத்தில் எதனையும் செய்ய முடியாது என்பது 22வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டம் தொடர்பான வாக்கெடுப்பின் போது நன்றாக தெளிவாகியதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

பசில் ராஜபக்ச கூறியதை கேட்காது, அதனை மீறி இந்த திருத்தச்சட்டத்திற்கு ஆதரவாக பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். தற்போது நாடாளுமன்றத்தில் பசில் ராஜபக்சவுக்கு அரசியல் அதிகாரமில்லை.

அதேவேளை மக்கள் வாழ முடியாத அளவுக்கு மிக மோசமான வறுமை சூழல் நாட்டில் ஏற்பட்டுள்ளது. பிள்ளைகளுக்கு உணவளிப்பதற்காக இருக்கும் அனைத்தையும் பெற்றோர் அடகு வைத்துள்ளதுடன் அடகு வைப்பதற்கு அவர்களிடம் தற்போது எதுவுமில்லை.

பாடசாலைக்கு செல்லும் பிள்ளைகளில் சுமார் 30 வீதமான பிள்ளைகள் உணவின்றி பாடசாலைகளுக்கு செல்வதாக கண்டறியப்பட்டுள்ளது எனவும் ஜே.சி.அலவத்துவல மேலும் தெரிவித்துள்ளார். 

Related posts

தனது மனைவி தினமும் குளிப்பதில்லை! நீதிமன்றம் சென்ற கணவன்

wpengine

Zoom தொழில்நுட்பம் மூலம் 22 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் பேசிய கோத்தா

wpengine

வவுனியா மாவட்ட அரசியவாதிகளே! அப்பாவி தொழிலாளிகளின் பிரச்சினைக்கு தீர்வு என்ன?

wpengine