செய்திகள்பிரதான செய்திகள்

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவிற்கு கடுமையான நிபந்தனைகளின் கீழ் பிணை..!!!

தங்க முலாம் பூசப்பட்ட T56 துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவிற்கு கடுமையான நிபந்தனைகளின் கீழ் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றம் குறித்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

துமிந்த திசாநாயக்க சமர்ப்பித்த பிணை மனுவை பரிசீலித்த பின்னர் கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இந்த உத்தரவை பிறப்பித்தார்.

சந்தேகநபரை 250,000 ரூபா ரொக்கப்பிணை மற்றும் தலா 5 மில்லியன் ரூபா பெறுமதியான 2 சரீரப்பிணைகளில் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

வெளிநாட்டு பயணத்தடை விதித்த நீதிபதி, சந்தேகநபரின் கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.

Related posts

இறைவனை முன்னிறுத்தி சமூக விடுதலையை நோக்கிப்பயணிக்கின்றோம் அமைச்சர் றிஷாட்

wpengine

மக்களின் நலன் கொண்டதாகவே அபிவிருத்திகள் இடம்பெற வேண்டும் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்

wpengine

“மாவா” என்ற போதைபொருள் உடன் சிலாவத்துறை-அரிப்பில் வைத்து ஒருவர் கைது

wpengine