பிரதான செய்திகள்

முன்னாள் அமைச்சர் சுரநிமல ராஜபக்ஸ காலமானார்.

தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (14) காலை முன்னாள் அமைச்சர் சுரநிமல ராஜபக்ஸ காலமானதாக அவரின் உறவினர்கள் தெரிவித்தனர்.

இரு பிள்ளைகளின் தந்தையான இவர் தனது 68 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.

சுரநிமல ராஜபக்ஸ பிரதமரின் விசேட பிரதிநிதியாக செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

ஹங்வெல்ல பகுதியில் அமைந்துள்ள அன்னாரின் வீட்டிற்கு இன்று பிற்பகல் பூதவுடல் எடுத்துச் செல்லப்படவுள்ளது.

 

Related posts

பேஸ்புக்கில் சிவப்பு எச்சரிக்கை இல்லை

wpengine

யார் போராளி ? யார் புத்திசாலி ? தலைவர்கள் வசைபாடுவது எதற்கு ? மஹிந்த – ரணில் விருந்து எதனை கற்றுத்தந்தது ?

wpengine

சமூகவலைத்தள பதிவுகள் தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளர் கோரிக்கை

wpengine