பிரதான செய்திகள்

முன்னால் உறுப்பினர்களுக்கு வெளிவந்த ஆப்பு

கலைக்கப்பட்ட மாகாணசபைகளின் வாகனங்கள் ஒப்படைக்கப்பட வேண்டுமென பெபரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

அண்மையில் பதவிக் காலம் முடிவடைந்த மாகாணசபைகளின் அமைச்சர்கள் பயன்படுத்திய வாகனங்கள் மீள ஒப்படைக்கப்பட வேண்டும் என கோரியுள்ளது.

வாகனங்கள் மட்டுமன்றி ஏனைய பொருட்களையும் மாகாணசபைகள் மீள ஒப்படைக்க வேண்டுமென பெபரல் அமைப்பு பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளது.
மாகாண ஆளுனர்கள் மற்றும் மாகாணசபை செயலாளர்கள் இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளது.

பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

இதேவேளை, மாகாணசபை தேர்தல்களுக்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

யாழ் மாவட்டத்தில் 8 சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை! ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டு

wpengine

மைத்திரி பாணியில் அப்பத்துடன் பல்டி

wpengine

பெருந்தோட்ட மக்களுக்கு சம்பள அதிகரிப்புடன், 10 பேர்ச் காணி.!

Maash