Breaking
Fri. Nov 22nd, 2024

எருக்கலம்பிட்டி ஹாரிஸ்

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், முன்னர் பதவி வகித்த கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான, தேசிய வடிவமைப்பு நிலையத்தின் ஏற்பாட்டில், முன்னர் தையில் பயிற்சிகளை பெற்ற 100 யுவதிகளுக்கு நேற்று (28) எருக்கலம்பிட்டியில் தையில் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலிலும் பங்களிப்பிலுமே, குறிப்பிட்ட யுவதிகளுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்தது.

இவர்களுக்கான 06 மாதகால பயிற்சிகளை, தையல் பயிற்சிக்கான பொறுப்பாளர் திருமதி. ஜிப்ரியா வழங்கியிருந்தார்.

இந்த 100 யுவதிகளுக்கான பயிற்சிநெறிகள் நிறைவடைந்ததன் பின்னர், தையல் இயந்திரங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதும், ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கோரப்பட்டிருந்ததால், உரியகாலத்தில் அதனை வழங்கமுடியாத துர்பாக்கியநிலை ஏற்பட்டிருந்தது.

எனினும், ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்து 100 நாட்களுக்குப் பின்னராவது, ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு வழங்கப்படவிருந்த இந்த தையல் இயந்திரங்களை, சிறிய மற்றும் நடுத்தர வியாபார தொழில் முயற்சிகள் அமைச்சு தற்போது கையளித்துள்ளது.

வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த இந்த யுவதிகளின் சுயதொழில் மேம்பாட்டுக்காக, தையல் இயந்திரங்களை வழங்க நடவடிக்கை எடுத்த அதன் பிரதானகர்த்தாவான முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், தேசிய வடிவமைப்பு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சட்டத்தரணி மில்ஹான் ஆகியோருக்கு யுவதிகள் சார்பில் நன்றி தெரிவிப்பதுடன், நேற்று இடம்பெற்ற நிகழ்வில் பங்கேற்றிருந்த மஸ்தான் எம்.பி, மன்னார் அரச அதிபர் உட்பட அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவிக்கின்றோம்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *