பிரதான செய்திகள்

முன்னால் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தவறு செய்யவில்லை பைஸல் காசிம் பா.உ

முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் ஏற்கனவே வகித்த அமைச்சுப் பதவியையே மீண்டும் ஏற்கவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பைஸல் காசிம் தெரிவித்துள்ளார்.


அமைச்சுப் பதவிகளை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் ஏற்கவுள்ளதாக நேற்றைய தினம் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் இது தொடர்பாக கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

நாம் பதவிகளை இராஜினாமா செய்தது இனவாதம் பேசுவதற்காக அல்ல. எமது மக்களுக்குப் பாதுகாப்பை வழங்குவதற்காக. நாம் ஒரு மாதத்துக்குள் இந்தப் பிரச்சினையை தீர்த்துத் தருமாறு கால அவகாசம் வழங்கினோம்.

முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு எதிராகவே அதிக பிரச்சினைகள் காணப்பட்டன.
அவர் தவறு செய்யவில்லையென்பதை நாம் எடுத்துக் காட்டியுள்ளோம்.

அமைச்சரவையில் எமக்காக கருத்துத் தெரிவிக்க கருத்துப் பலம் இல்லாத காரணத்தால் நாம் அமைச்சுப் பதவியை ஏற்க தீர்மானம் எடுத்தோம்.

ஜனாதிபதியை சந்தித்த போதும், அமைச்சுப் பதவிகளை ஏற்குமாறு வேண்டுகோள் விடுத்தார். நாம் இருந்த அமைச்சுப் பதவிகளுக்கே மீண்டும் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளோம்.

முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனும் அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்பதாக தெரிவித்தார் என்றார்.

Related posts

15 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான அழைப்பாணை

wpengine

சமுகவலைத்தளத்தில் பிரதமர் உடன் சண்டை போடும் நாமல் ராஜபக்ச

wpengine

பாராளுமன்ற உறுப்பினர் முஜிப் ரஹ்மானின் ஏற்பாட்டில் தொழில் வாய்ப்பு வசதி

wpengine