உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையதாக கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் விடுவிக்கப்பட்டதன் பின்னால் மறைக்கப்பட்ட ஒப்பந்தம் இருப்பதாக கத்தோலிக்க திருச்சபை சந்தேகம் வெளியிட்டுள்ளது.
இதனையடுத்து இந்த விடயம் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பின் ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
கத்தோலிக்க சபையின் சந்தேகம் வெளியிடப்பட்டமையை அடுத்து முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எந்த பதவியையும் வழங்க எந்த நடவடிக்கையும் இல்லை என்று அரசாங்கம் இன்று வலியுறுத்தியுள்ளது.
கடும்போக்குவாதிகளுடன் எந்தவிதமான உடன்படிக்கையையும் அரசாங்கம் செய்துகொள்ளாது என்று விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார்.
அமைச்சரவை செய்தித் தொடர்பாளர், அமைச்சர் கெஹலியா ரம்புக்வெல்ல, பதியுதீன் குறித்து சில கரிசனைகள் இருப்பதால் அவரை அரசாங்கத்திற்குள் வரவழைக்கப்படமாட்டார் என்று தெரிவித்துள்ளார்.
பதியுதீனுடன் எந்த ஒப்பந்தமும் செய்ய அரசாங்கம் முட்டாள் தனமானது அல்ல என்று அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் தனது கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், அரசாங்கத்துடன் எந்த உடன்பாடும் கொண்டிருக்கவில்லை. அத்துடன் அரசாங்கத்துடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.