பிரதான செய்திகள்

முன்னால் அமைச்சர் உளறி வருகின்றார்! வடக்கு,கிழக்கில் தனித்து போட்டி அமைச்சர் ஹக்கீம்

முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ முன்னுக்குப்பின் முரணாக உளறி வருவதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் விமர்சித்துள்ளார்.

நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் முயற்சியினால் சீன நிதியுதவியுடன் குடிநீர் தொடர்பான உயர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான ஆய்வு கூடமொன்றுக்கு அடிக்கல் நடும் வைபவம் நேற்று கண்டியில் நடைபெற்றுள்ளது.

இதில் பிரதம விருந்தினர்களாக நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம், மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது, அரசியலமைப்பு தொடர்பான கேள்வியொன்றுக்குப் பதிலளித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம்,
புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவது தொடர்பான அரசியலமைப்புச் சபையின் 70 கூட்டங்களுக்கு மேல் முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ கலந்து கொண்டுள்ளார்.

எனினும் இப்போது அவர் புதிய அரசியலமைப்பை கடுமையாக விமர்சித்து வருகின்றார். அந்த வகையில் அவர் பதவியில் இருந்தபோது ஒன்றும், இல்லாதபோது ஒன்றுமாக முன்னுக்குப் பின் முரணாக உளறிக் கொண்டிருக்கின்றார்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலின் போது முஸ்லிம் காங்கிரஸ் கட்சி இலங்கையின் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் போட்டியிடும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் தனித்தும், ஏனைய மாகாணங்களில் ஐ.தே.கவின் கூட்டணிக் கட்சியாகவும் தேர்தலில் களமிறங்கத் தீர்மானித்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மன்னார் மனிதப் புதைகுழியில் 239 எலும்புக்கூடுகள்

wpengine

சர்ச்சையை கிளப்பிய (வீடியோ)

wpengine

அனைத்து இலங்கை விவசாயிகள் சம்மேளனம் ஜனாதிபதிக்கு கடிதம்

wpengine