இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் முகமாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், இன்று (13) கொழும்பில் உள்ள இங்கிலாந்து உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குச் சென்று, அங்கு வைக்கப்பட்டிருந்த இரங்கல் புத்தகத்தில் கையொப்பமிட்டு, தனது அனுதாபத்தை வெளிப்படுத்தினார்.
