பிரதான செய்திகள்

முன்னால் அமைச்சருக்கு செப்டெம்பர் முதலாம் திகதி வரை விளக்கமறியல்

முன்னாள் அமைச்சரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனை எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் கொழும்பு – கோட்டை நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போதே ரிஷாத் பதியுதீனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைப்பதற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவல் உத்தரவில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் கடந்த பத்தாம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

Related posts

திருமலையில் நீதி கோரி சவப்பெட்டியுடன் போராட்டம்!

Editor

வடமாகாண அமைச்சர்களுக்கான விசாரணை! ஆளுநர் கோரிக்கை

wpengine

அனைத்து அரச பாடசாலைகளம் 5 நாட்கள் விடுமுறை

wpengine