பிரதான செய்திகள்

முன்னர் கலைக்க வேண்டுமாயின் உறுப்பினர்களின் மூன்றில் இரண்டு பேரின் அனுமதி அவசியம்.

நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை உறுப்பினர்களின் அனுமதியுடன் நாடாளுமன்றத்தை கலைத்து, சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்த போதிலும் அந்த காலத்தில் தேர்தலை நடத்த முடியாது என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளதால், அரசாங்கம் அந்த முயற்சியை கைவிட்டுள்ளதாக தெரியவருகிறது.


நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட தினத்தில் இருந்து தேர்தல் நடத்தப்படும் வரை குறைந்தது 52 நாட்கள் இருக்க வேண்டும் என தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


பெப்ரவரி 20 ஆம் திகதியின் பின்னர் நாடாளுமன்றத்தை கலைத்து, ஏப்ரல் மாதம் முதல் இரண்டு வாரங்களில் தேர்தலை நடத்த முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.


அதேவேளை நாடாளுமன்றத்தின் கூட்டம் எதிர்வரும் 18ஆம் திகதி கூடவுள்ளதாகவும் அன்றைய தினம் நாடாளுமன்றத்தை கலைக்கும் யோசனையை நிறைவேற்ற முடியாது என இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சி ஒன்றின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.


நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பாக அரசியல் இணக்கத்தை ஏற்படுத்தி யோசனை ஒன்றை நிறைவேற்றி எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு முன்னர் நாடாளுமன்றத்தை கலைக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.


2015 ஆம் ஆண்டு செப்டம்பர் முதலாம் திகதி முதல் செயற்பட்டு வரும் தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் 2020 செப்டம்பர் முதலாம் திகதி முடிவடைக்கின்றது.


அதேவேளை எதிர்வரும் மார்ச் முதலாம் திகதிக்கு பின்னர் தான் விரும்பிய தினத்தில் நாடாளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது.

அன்றைய தினம் நாடாளுமன்றத்தை கலைக்க போவதாக ஜனாதிபதி ஏற்கனவே அறிவித்துள்ளார்.

அதற்கு முன்னர் கலைக்க வேண்டுமாயின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பேரின் அனுமதி அவசியம்.

Related posts

பெண்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் உற்பத்தி பொருட்களின் கண்காட்சி

wpengine

இந்திய விமானப் படை பிரதானி இலங்கைக்கு விஜயம்!

Editor

தமிழரசுக் கட்சியின்; பாரம்பரிய நட்புக்கட்சி ஜக்கிய தேசிய கட்சி- சிவசக்தி ஆனந்தன்

wpengine