தமது அரசியல் முன்னணியில் இணைந்து கொள்ளுமாறு ஐக்கிய தேசிய சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற சந்திப்பு ஒன்றின் போது அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளதாக தெரியவருகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பௌத்த பிக்குகள், சுதேச வைத்தியர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளிகள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் மிதக்கப்படும் நிலைக்கு தற்போது உள்ளாகியுள்ளனர்.
எனவே அவர்களை எம்முடன் வந்து இணையுமாறு கோரிக்கை விடுப்பதுடன், எமது முன்னணி அனைத்து பிரிவினருடனும் இணைந்து செயற்பட தயாராக இருக்கிறது என சஜித் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், அரசாங்கம் இன்று நிதியில்லை என்று கூறுவதற்கு அதன் தவறான அணுகுமுறையே காரணமாகும்.
ஏற்கனவே இருந்த வரிமுறைகளை ஆட்சிக்கு வந்ததும் குறைத்தமை காரணமாக அரசாங்கத்துக்கு 600 மில்லியன் ரூபா நட்டமேற்பட்டுள்ளதாக சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.